என் மலர்
உள்ளூர் செய்திகள்

உடன்குடி அருகே தருவைகுளத்தில் தனியார் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் - விவசாயிகள் கோரிக்கை
- தனியார் பலர் இக்குளத்தை ஆக்கிரமித்து அடையாள கற்களை நிறுவியுள்ளனர்.
- இதனால் இக்குளத்தில் தண்ணீர் சேமிக்கும் கொள்ளளவு மிக மிக குறைவாகிவிடும்.
உடன்குடி:
உடன்குடியில் இருந்து குலசேகரன்பட்டினம் செல்லும் சாலையில் தருவைகுளம் அமைந்துள்ளது. வருடம் தோறும் இக்குளத்திற்கு முழுமையாக தண்ணீர் விட்டால் சுமார் 5 கிராம ஊராட்சி பகுதியை சேர்ந்த 150-க்கு மேற்பட்ட கிராமங்களில் நிலத்தடி நீர் மற்றும் விவசாய நிலம் பாதுகாக்கப்படும். தனியார் பலர் இக்குளத்தை ஆக்கிரமித்து அடையாள கற்களை நிறுவியுள்ளனர்.
இதனால் இக்குளத்தின் பகுதி குறுகி போய் உள்ளது. இக்குளத்தில் தண்ணீர் சேமிக்கும் கொள்ளளவு மிக மிக குறைவாகிவிடும். இதனால் தருவைகுளத்தில் உள்ள தனியார் ஆக்கிரமிப்புகளை உடனடியாக அப்புறப்படுத்த மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story






