search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவையில்  ஆதார் எண்ணுடன் ரவுடிகள் பட்டியல் தயாரித்து கண்காணிப்பு
    X

    கோவையில் ஆதார் எண்ணுடன் ரவுடிகள் பட்டியல் தயாரித்து கண்காணிப்பு

    • ஆதார் எண் வைத்து குற்றவாளிகளின் விவரங்கள் தனியாக அடையாளப்படுத்தப்படுகிறது.
    • குற்றவாளிகளை தரம் பிரித்து கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    கோவை,

    கோவை மாநகர் மற்றும் புறநகரில் பல்வேறு குற்ற வழக்குகளில் கைதாகும் நபர்களின் ஆதார் அட்டை நகல் பெறுவது கட்டாயமாக் கப்பட்டுள்ளது.

    ஆதார் எண் வைத்து குற்றவாளிகளின் விவரங்கள் தனியாக அடையாளப் படுத்தப்படுகிறது. வழக்குகளில் குற்றவாளியின் பெயர், முகவரியுடன் ஆதார் விவரங்களையும் இணைக்க வலியு றுத்தப்பட்டு வருகிறது. ஆனால் சில குற்றவாளிகள் ஆதார் அட்டை இல்லாமல் உள்ளனர். சிலர் ஆதார் அட்டை விவரங்களை தெரிவிக்க மறுத்து விடுகின்றனர். போலீசார் குற்றவாளிகளை பிடிப்பதுடன் அவர்களின் ஆதார் விவரங்களை பெறமுடியாமல் உள்ளனர்.

    கோர்ட்டில் ஆஜர்படுத்த, அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்காக சேர்க்க, ஜெயிலுக்கு கொண்டு செல்ல என பல்வேறு இடங்களில் ஆதார் விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது. பல்வேறு குற்ற வழக்குகள் வாரியாக குற்றவாளிகளை தரம் பிரித்து கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ரவுடிகள், அடிதடி மோதல் நபர் கள், போதை பொருள் வியாபாரிகள் என பல் வேறு வகையான பட்டியல் தயாரித்து அந்த குற்றவாளிகளை கண்காணிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    இதுகுறித்து போலீசார் கூறியதாவது:-

    ஆதார் அட்டை இல்லாமல் சில குற்றவாளிகள் சிக்குகிறார்கள். சிலர் வெளியூர், வெளி மாநிலத்தை சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள். இவர்களின் ஆதார் எண் களை தேடி கண்டறிவது சிரமமாக இருக்கிறது. ஆதார் எண் விவரங்களுடன் முதல் தகவல் அறிக்கை தயார் செய்ய வேண்டியது உள்ளது.

    போலீசின் சி.சி.டி.என்.எஸ். இணையதளத்தில் வழக்கு விவரங்களுடன் ஆதார் விவரங்களை சேர்க்க வேண்டி உள்ளது. சில குற்றவாளிகள் நீண்ட காலம் ஜெயிலில் இருந்து வெளியே வந்துள்ளனர். இதில் ஆதார் எடுக்காதவர் களும் உள்ளனர். வெளியே வந்து பல்வேறு குற்றங்க ளில் ஈடுபடுகிறார்கள்.இவர்களை கைது செய்து மீண்டும் ஜெயிலில் அடைக்க செல்லும் போது ஆதார் இல்லாமல் இருப்பதால் பல்வேறு சிக்கல் ஏற்படுகிறது.

    குற்றவாளிகள் தொடர்பான வரலாற்று பதிவேடு இருக்கிறது. புதிய குற்றவாளிகள், வெளியூர் குற்றவா ளிகள் இந்த பட்டியலில் உள்ளனர். இவர்களில் ஜாமீனில் வந்தவர்கள். சிறையில் உள்ளவர்கள், தலைமறைவாக இருப்ப வர்கள் குறித்து விசாரித்து வருகிறோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

    Next Story
    ×