என் மலர்
உள்ளூர் செய்திகள்

செங்கோட்டை குலசேகரநாதர் கோவிலில் பிரதோஷ வழிபாடு
- சுவாமி, அம்பாள் மற்றும் நந்தீஸ்வருக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார ஆராதனைகள் நடந்தது.
- சிவபக்தர்கள் தேவாரம், திருவாசகம் பாடல்களை பாடி சுவாமியை வழிபட்டனர்.
செங்கோட்டை:
செங்கோட்டை குலசேகர நாதர் கோவிலில் பிரதோஷத்தை முன்னிட்டு சுவாமி, அம்பாள் மற்றும் நந்தீஸ்வருக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார ஆராதனைகள் நடந்தது. இதனை போன்று வைகாசி மாதம் ஆறுமுகசாமி ஒடுக்க கோவிலில் பிரதோஷத்தை முன்னிட்டு சுவாமி, அம்பாள் மற்றும் நந்தீஸ்வருக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார ஆராதனை நடந்தது.
அதனைத்தொடர்ந்து சிவபக்தர்கள் தேவாரம், திருவாசகம் பாடல்களை பாடி சுவாமியை வழிபட்டனர். இலத்தூர், புளியரை, இலஞ்சி உள்ளிட்ட பகுதிகளில் பிரதோச வாழிபாடு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அருள் பிரசாதம் பெற்று சென்றனர்.
Next Story






