search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பாவூர்சத்திரத்தில் பொதிகை சதுரங்க சாம்பியன்ஷிப் போட்டிகள்
    X

    பொதிகை சதுரங்க சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்றவர்களை படத்தில் காணலாம்.

    பாவூர்சத்திரத்தில் பொதிகை சதுரங்க சாம்பியன்ஷிப் போட்டிகள்

    • நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இருந்து 150 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.
    • பொதுப்பிரிவில் அம்பை கேம்பிரிட்ஜ் பள்ளி மாணவன் சாம்ஜெப்ரி சாம்பியன் பட்டம் வென்றார்.

    தென்காசி:

    தென்காசி மாவட்ட பொதிகை சதுரங்க வளர்ச்சி கழகம் சார்பில், பொதிகை சதுரங்க சாம்பியன்ஷிப் போட்டி பாவூர்சத்திரத்தில் நடைபெற்றது.

    இதில் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இருந்து 150 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.

    போட்டிகள் பொதுப் பிரிவு, புதிய வீரர்கள் பிரிவு, ஆரம்ப நிலை பிரிவு என 3 பிரிவு களாக நடத்தப்பட்டது. போட்டிகளை மாவட்ட சதுரங்க கழக தலைவர் ஆர்.கே.காளிதாசன் தொடங்கி வைத்தார். செயலர் வைகை குமார் முன்னிலை வகித்தார்.

    பொதுப்பிரிவில் அம்பை கேம்பிரிட்ஜ் பள்ளி மாணவன் சாம்ஜெப்ரி சாம்பியன் பட்டம் வென்றார். மேலும் நெல்லை மாவட்ட வீரர் ராமச்சந்திரன், தென்காசி மாவட்ட வீரர் சிபி சக்கரவர்த்தி, இடைகால் ஸ்டஅக் ஹைடெக் பள்ளி மாணவர் ஜேட் ஆட்ரியான், இலஞ்சி பாரத் பள்ளி மாணவர் சுரேந்தர் ஆகியோர் முதல் 5 இடங்களில் வெற்றி பெற்றனர்.

    புது வீரர்கள் பிரிவு மாணவர்கள் பிரிவில் சுரண்டை அரசுப்பள்ளி மாணவர் பரணிசுதாகர், மாணவிகள் பிரிவில் இடைகால் ஸ்டஅக் ஹைடெக் பள்ளி மாணவி தர்ஷினி, ஆரம்ப நிலை வீரர்கள் பிரிவில் தென்காசி வேல்ஸ் பள்ளி மாணவர் தீனதயாளன் ஆகியோர் முதலிடம் பெற்றனர்.

    பொதுப்பிரிவில் வெற்றி பெற்றவர்களுக்கு ரொக்கப்பரிசுடன் பரிசு கோப்பையும் மற்ற பிரிவின ருக்கு பரிசு கோப்பையும் வழங்கப்பட்டது. மேலும் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 4 இடங்கள் பெற்றவர்கள் பொதிகை கோப்பை 2023 மாநில சதுரங்க போட்டியில் விளையாட தகுதி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

    விழாவில் ஆலங்குளம் ஜீவா மாண்டிச்சோரி பள்ளி முதல்வர் ஏஞ்சல் பொன்ராஜ், மாவட்ட மூத்த சதுரங்க வீரர் பாலகிருஷ்ணன், குலசேகரப்பட்டி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மணிவண்ணன், சதுரங்க பயிற்சியாளர்கள் ஜெயசங்கர், அருண்குமார், ராஜகாந்தன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை சதுரங்க கழக இயக்குனர் கண்ணன் செய்திருந்தார்.

    Next Story
    ×