search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சுரண்டையில் மக்கள் தொகை விழிப்புணர்வு கருத்தரங்கம்
    X

    கருத்தரங்கில் மாணவி ஒருவருக்கு பாராட்டு சான்றிதழை பழனி நாடார் எம்.எல்.ஏ. வழங்கிய காட்சி.


    சுரண்டையில் மக்கள் தொகை விழிப்புணர்வு கருத்தரங்கம்

    • பேச்சுப்போட்டி மற்றும் கருத்தரங்கில் சிறப்பாக உரையாற்றிய மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.
    • மக்கள் தொகை அதிகரிப்பால் ஏற்படும் விளைவு குறித்து மாணவர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.

    சுரண்டை:

    நெல்லை மாவட்ட மக்கள் நல்வாழ்வு துறை சார்பில் உலக மக்கள் தொகை விழிப்புணர்வு கருத்தரங்கம் மற்றும் விழிப்புணர்வு ஊர்வலம் சுரண்டையில் நடைபெற்றது. கருத்தரங்கை தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாதன் தொடங்கி வைத்தார்.விழிப்புணர்வு பேரணியை பழனி நாடார் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

    சுரண்டை நகராட்சி தலைவர் வள்ளி முருகன், வட்டார சுகாதார ஆய்வாளர் சாந்தி, மருத்துவர்கள் மோகன் ராவ், மீனா, அன்னலட்சுமி நிறுவனத்தின் முதல்வர் வைரமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    பேச்சுப்போட்டி மற்றும் கருத்தரங்கில் சிறப்பாக உரையாற்றிய மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. மேலும் மக்கள் தொகை அதிகரிப்பால் ஏற்படும் விளைவு குறித்து மாணவர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் சுரண்டை நகர காங்கிரஸ் தலைவர் எஸ்‌.கே.டி.ஜெயபால், தி.மு.க. செயலாளர் ஜெயபாலன், நகர் மன்ற உறுப்பினர்கள் அமுதா சந்திரன், ராஜ்குமார், நிர்வாகிகள் பால் என்ற சண்முகவேல், தெய்வேந்திரன், தி.மு.க. அவைத்தலைவர் சுப்பிரமணியன், கூட்டுறவு கணேசன், கே.டி.பாலன், சார்லஸ், கோமதி நாயகம், சுதன் ராஜா, பிரபாகர், அரவிந்த் மற்றும் மாணவ, மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×