search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உடன்குடி வட்டார பகுதியில் வறண்டு கிடக்கும் குளங்கள்
    X

    தண்ணீர் இல்லாமல் வறண்டு கிடக்கும் தாங்கை குளத்தையும், மழையை எதிர்பார்த்து பயிரிடப்பட்ட வாழை, கடலை பயிர்களையும் படத்தில் காணலாம்.

    உடன்குடி வட்டார பகுதியில் வறண்டு கிடக்கும் குளங்கள்

    • உடன்குடி பகுதியில் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் புதியதாக 10 -க்கும் மேற்பட்ட குளங்கள் மற்றும் ஊரணிகளை உருவாக்கினர்.
    • முருங்கை, கடலைஉட்பட பல்வேறு பயிர்கள் புதியதாக நடவு செய்யப்பட்டு விவசாய பணி நடக்கிறது.

    உடன்குடி:

    உடன்குடி வட்டார பகுதியில் சடையனேரி, தாங்கை, தருவை ஆகிய 3 குளங்கள் பழமையான குளங்கள் ஆகும். இந்த 3 குளங்களை தவிர விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் புதியதாக அய்யனார் குளம், மாநாட்சி குளம், தண்டுபத்து குளம் என சுமார் 10 -க்கும் மேற்பட்ட குளங்கள் மற்றும் ஊரணிகளை கடந்த ஆண்டு உருவாக்கினர். கடந்த ஆண்டு இதேநாளில் அனைத்து குளங்களும் முழுமையாக நிரம்பி கருமேனிஆறு வழியாக மணப்பாடு கடலுக்கு மழைநீர் சென்றது. இதனால் இப்பகுதியில் உள்ள அனைத்து விவசாய நிலங்கள் பாதுகாக்கப்பட்டது, கடல் நீர் மட்டம் விவசாய நிலங்களில் ஊடுருவாமல் தடுக்கப்பட்டது.

    இந்த ஆண்டு பருவ மழையும் பெய்யவில்லை. சடையனேரி கால்வாயில் தண்ணீரும் வரவில்லை. இதனால் அனைத்து குளங்கள்.குட்டைகள். ஊரணி, கருமேனி ஆறு என எல்லாமே தண்ணீரின்றி வறண்டு கிடக்கிறது. மழை வரும், குளங்கள் நிரம்பும் என்ற நம்பிக்கையில் தென்னை, வாழை, முருங்கை, கடலைஉட்பட பல்வேறு பயிர்கள் புதியதாக நடவு செய்யப்பட்டு விவசாய பணி நடக்கிறது. இந்த ஆண்டு இனி மழை வருமா?என்பது கேள்விக்குறியாகி விட்டது. நாளுக்கு நாள் பனிப்பொழிவு அதிகரித்துக் கொண்டே வருகிறது, மாலை 4 மணி முதல் மறுநாள் காலை 7 மணி வரை பனிப்பொழிவு கடுமையாக உள்ளது. மழை வர வேண்டும், அல்லது கால்வாய் வழியாக தண்ணீர் கொண்டு வந்து நிரப்ப வேண்டும், இப்படி செய்யாவிட்டால் அனைத்து விவசாயமும் முழுமையாக அழிந்துவிடும் என்ற பெரும் கவலையில் விவசாயிகள் உள்ளனர்.

    Next Story
    ×