search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அக்னி பாதை திட்டத்திற்கு எதிர்ப்பு ரெயில்நிலையம், தபால் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்
    X

    ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை படத்தில் காணலாம்.

    அக்னி பாதை திட்டத்திற்கு எதிர்ப்பு ரெயில்நிலையம், தபால் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்

    • மத்திய அரசின் அக்னி பாதை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் கடந்த ஒரு வாரமாக கடுமையான போராட்டங்கள் நடந்து வருகிறது
    • திண்டுக்கல்லில் அக்னி பாதை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜனநாயகவாலிபர் சங்கம் மற்றும கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    திண்டுக்கல்:

    மத்திய அரசின் அக்னி பாதை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் கடந்த ஒரு வாரமாக கடுமையான போராட்டங்கள் நடந்து வருகிறது. பல மாநிலங்களில் ரெயில்கள் தாக்கப்பட்டு எரிக்கப்படுவதால் ரெயில் நிலையங்களுக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

    திண்டுக்கல்லிலும் ரெயில்நிலையங்களில் 24 மணி நேர போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இன்று திண்டுக்கல் ரெயில் நிலையம் முன்பு இந்தியஜனநாயக வாலிபர் சங்க மாவட்டக்குழு சார்பில் மாவட்ட தலைவர் சிலம்பரசன், மாவட்ட செயலாளர் பாலாஜி ஆகியோர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    அப்போது நாட்டின் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் ராணுவ வீரர்களை ஒப்பந்த அடிப்படையில் தேர்வு செய்யும் நடைமுறையை மத்திய அரசு கைவிடவேண்டும் என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

    இதேபோல் திண்டுக்கல் தலைமை தபால் நிலையம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி நகர, ஒன்றிய குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டவர்கள் தண்டால் எடுத்து தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர். மத்திய அரசு அக்னிபாதை திட்டத்தை கைவிடும் வரை தங்கள் போராட்டம் தொடரும் என்று அவர்கள் தெரிவித்தனர்.

    Next Story
    ×