search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பேரூர் கல்யாணி யானை உற்சாகமாக குளிக்க குளியல் தொட்டி
    X

    பேரூர் கல்யாணி யானை உற்சாகமாக குளிக்க குளியல் தொட்டி

    • ரூ.60 லட்சம் மதிப்பில் குளியல் தொட்டி அமைக்கப்படுகிறது.
    • நடைபயிற்சி செல்வதற்கும் பாதை அமைக்கப்படுகிறது

    பேரூர்,

    கோவையில் பிரசித்தி பெற்ற பட்டீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஏராளமான கோபுரங்கள், மண்டபங்கள், கலை நுட்பத்துடன் காண்போரை வியக்க வைக்கும் வகையில் உள்ளன.

    இந்த கோவிலுக்கு கோவை மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்கள், வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கிறார்கள். இந்த கோவிலின் மற்றொரு சிறப்பு இங்குள்ள கல்யாணி யானை தான்.

    இந்த கல்யாணி யானை கடந்த 1996-ம் ஆண்டு பேரூர் கோவிலுக்கு கொண்டு வரப்பட்டது. யானையை பாகன் ரவி பராமரித்து வருகிறார்.

    இந்த யானை கோவிலுக்கு வரும் குழந்தைகள் முதல் பெரியவர்களை வரை அனைவரையும் கவர்ந்து வருகிறது.

    யானையை பார்க்கவே கோவிலுக்கு வரும் தனி கூட்டமும் இருக்கிறது. கல்யாணி யானைக்கு தற்போது 32 வயதாகிறது.

    இந்த நிலையில் பேரூர் கல்யாணி யானை குளிக்கவும், நடைபயிற்சி மேற்கொள்ளவும் அறநிலையத்துறை சார்பில் ரூ.60 லட்சம் நிதிஒதுக்கீடு செய்யப்பட்டது.

    இதையடுத்து குளியல் தொட்டி அமைக்க பேரூர் கோவில் நிர்வாகத்தினர் பல பகுதிகளில் இடம் தேர்வு செய்தனர்.

    தற்போது கோவிலுக்கு அடுத்து அங்காளம்மன் கோவில் பின் பகுதியில் கோவிலுக்கு சொந்தமான 5.5 ஏக்கர் நிலப்பரப்பு தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த பகுதியில் கல்யாணி யானை குளிக்க பெரிய அளவிலான குளியல் தொட்டி அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இதேபோல்அதே

    பகுதியில் யானை நடை பயிற்சி மேற்கொள்ளவும் நடைபாதை அமைக்கப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து அறநிலையத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

    பேரூர் கோவில் கல்யாணி யானை கோவில் வளாகத்தில் காலை, மாலை என 2 வேளைகளில் குளித்து வருகிறது. கோவிலுக்கு வரும் பக்தர்கள் பலர் யானை குளிப்பதை பார்க்கின்றனர்.

    இதன் காரணமாக 1½ மணி நேரம் மட்டுமே யானையால் குளிக்க முடிகிறது. நடைபயிற்சிக்கும் போதிய இடம் இல்லை. தற்போது கோவில் அருகே கோவிலுக்கு சொந்தமான இடத்தில் ரூ.60 லட்சம் மதிப்பில் குளியல் தொட்டி மற்றும் நடைபயிற்சி பாதை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

    இந்த பணிகள் விரைந்து முடிக்கப்பட்டு, அமைச்சரால் திறந்து வைக்கப்படும். இனிமேல் கல்யாணி யானை 3 மணி நேரம் குளியல் தொட்டியில் குளியல் போடும். 10 கிலோ மீட்டர் தூரம் வரை தினமும் நடைபயிற்சி மேற்கொள்ளும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

    Next Story
    ×