என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இடஒதுக்கீடு கோரி தபால் அனுப்பும் போராட்டம்
    X

    இடஒதுக்கீடு கோரி தபால் அனுப்பும் போராட்டம்

    • தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிக்கு தபால் அனுப்பப்பட்டது
    • வைத்தியநாதபுர தபால் நிலையத்தில் இருந்து 300க்கும் மேற்பட்ட தபால்கள் அனுப்பப்பட்டது

    அகரம்சீகூர்,

    பெரம்பலூர் மாவட்டம் அகரம்சீகூர் அடுத்து மங்களமேடு அருகே வைத்தியநாதபுரம் கிராமத்தில் பாமக மற்றும் வன்னியர் நிர்வாகிகள் வன்னியர்களுக்கு 10.5% சதவீத இட ஒதுக்கீடு நிறைவேற்ற கோரிசெங்கல்பட்டு பாமக மாவட்ட துணை தலைவர் பழனிவேல் தலைமையில் மாண்புமிகு உயர் நீதிமன்ற நீதிபதி மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆகியோருக்கு தபால் மூலம் கடிதம் அனுப்பும் போராட்டம் கிராம முக்கிய வீதி வழியாக 300- க்கும் மேற்பட்ட தபால்களை எடுத்து கொண்டு அஞ்சல் அலுவலகத்திற்கு சென்று அலுவளகத்தில் உள்ள தபால் அதிகாரியிடம் மனுக்களை கையில் கொடுத்தனர்.இந்நிகழ்ச்சியில் முன்னாள் வன்னியர் சங்க ஒன்றிய தலைவர் இராமசாமி,கிளை செயலாளர் கலையரசன், பாமக நிர்வாகிகள் கண்ணன்,ராமநாதன்,மஞ்சன்,பெரியசாமி எஸ். பி.ஆர்.அருண், வினித்,ச ங்கர்,மணிகண்டன்,விக்கி, அதியமான், பிரகாஷ், பாண்டியன், ஜயப்பன்,ராமலிங்கம், தங்கராசு, தேவேந்திரன்,ராசு உள்ளிட்ட பாமக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பெண்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×