search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தண்ணீர் தினத்தன்று தண்ணீர் கேட்டு சாலை மறியல் போராட்டம்
    X

    தண்ணீர் தினத்தன்று தண்ணீர் கேட்டு சாலை மறியல் போராட்டம்

    • காலி குடத்துடன் நடந்த மறியல் போராட்டத்தால் பரபரப்பு
    • அதிகாரிகள் தாமதத்தால் 3 மணி நேரம் ெதாடர்ந்த அவலம்

    குன்னம்,

    பெரம்பலூர் மாவட்டம் குன்னம அருகே வேப்பூர் ஒன்றியம் புதுவேட்டைகுடி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் உள்ள 1வது வார்டில் சுமார் நூற்றுக்கணக்கான குடியிருப்புகள் உள்ளன. இந்த குடியிருப்புகளுக்கு மத்திய அரசின் ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் குடிநீர் இணைப்பு கொடுப்பதற்காக, அப்பகுதியில் உள்ள குடியிருப்புகள் அனைத்திற்கும் குழாய் இணைப்பு கொடுக்கப்பட்டது. ஆனால் இதற்கான பணிகள் முடிவடைந்து 6 மாதங்களுக்கும் மேல் ஆகியும் இதுவரை குடிநீர் சப்ளை நடைபெறவில்லை. இது குறித்து அப்பகுதி பொதுமக்கள், கவுன்சிலர், பஞ்சாயத்து தலைவர், உள்ளாட்சி துறை அலுவலர்கள் என பல இடங்களில் மனு அளித்தும் எந்த வித பயனும் இல்லை, இதனால் பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் திடீர் என்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். திட்டக்குடியில் உள்ள அரியலூர் சாலையில் காலி குடங்களுடன் திரண்ட பெண்கள் குடிநீர் வழங்காததை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.மறியல் போராட்டம் கேள்விப்பட்டு அப்பகுதிக்கு வந்த குன்னம் போலீசார் பெண்களை சமாதானம் செய்வதற்கு முயற்சி செய்தனர். ஆனால் அரசு அலுவலர்கள் வந்து உரிய பதில் அளிக்கும் வரை மறியல் போராட்டத்தை கைவிடமாட்டோம் என்று பெண்கள் திட்டவட்டமாக தெரிவித்தனர். இது குறித்து போலீசார் அரசு அலுவலர்களை தொடர்பு கொண்டு தெரிவித்த போது தண்ணீர் தினத்தை முன்னிட்டு நடைபெறும் கிராம சபா கூட்டத்தில் கலந்து கொண்டு இருப்பதால் கூட்டம் முடிந்தவுடன்தான் வரமுடியும் என்று அவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சாலை மறியல் போராட்டமானது சுமார் 3 மணி நேரமாக தொடர்ந்தது. இதனால் போக்குவரத்து அப்பகுதியில் தடை பட்டது.கிராமசபா கூட்டம் முடிந்து அதன் பின்னர் மறியல் நடந்த இடத்திற்கு வந்த அரசு அலுவலர்கள் 2 நாட்களுக்குள் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதனை தொடர்ந்து மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. தண்ணீர் தினத்தன்று தண்ணீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    Next Story
    ×