என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அத்தியூர் கிராமத்தில் புதிய சிமெண்ட் சாலை அமைக்க கோரிக்கை
    X

    அத்தியூர் கிராமத்தில் புதிய சிமெண்ட் சாலை அமைக்க கோரிக்கை

    • அத்தியூர் கிராமத்தில் புதிய சிமெண்ட் சாலை அமைக்க கோரிக்கை விடுத்துள்ளனர்
    • சாலை அமைத்து 4-மாதங்களிலேயே இச் சாலை மிகவும் சேதம் அடைந்துள்ளதால் மழை காலங்களில் மழைநீர் தேங்கி நிற்கக்கூடிய சூழ்நிலையில் உள்ளது.

    அகரம்சீகூர்,

    பெரம்பலூர் மாவட்டம் அகரம்சீகூர் அடுத்து அத்தியூர் கிராமத்தில் 2-வது வார்டு கக்கன்ஜி நகரில் சுமார் 5.66 லட்சம் மதிப்பீட்டில் கடந்த நான்கு மாதங்களுக்கு சிமெண்ட் சாலை அமைத்துள்ளனர். அப்போதே இந்த சாலை தரமற்றதாக உள்ளதாக அதிகாரிகளிடம் பொதுமக்கள் புகார் அளித்ததாக கூறப்படுகிறது. சாலை அமைத்து 4-மாதங்களிலேயே இச் சாலை மிகவும் சேதம் அடைந்துள்ளதால் மழை காலங்களில் மழைநீர் தேங்கி நிற்கக்கூடிய சூழ்நிலையில் உள்ளது. எனவே தரமற்ற இந்த சிமெண்ட் சாலையை அகற்றி தரமான சிமெண்ட் சாலை அமைக்க மாவட்ட நிர்வாகம் உரிய ஒப்பந்ததாரர்கள் மீது நடவடிக்கை எடுத்து தரமான சிமெண்ட் சாலை அமைக்க இப்பகுதி மக்கள் கோரிக்கையாக வைக்கின்றனர்.

    Next Story
    ×