என் மலர்
உள்ளூர் செய்திகள்

அஞ்சல் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
- அஞ்சல் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
- மத்திய அரசின் முடிவைக் கண்டித்து நடந்தது
பெரம்பலூர்:
அஞ்சல் துறையை தனியாருக்கு தாரை வார்க்கும் மத்திய அரசின் முடிவைக் கண்டித்து தேசிய அஞ்சல் ஊழியர் சங்கம் சார்பில் பெரம்பலூர் தலைமை அஞ்சல் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு மாநில செயலாளர் விஷ்ணுதேவன் தலைமை வகித்தார்.
திருவரங்க அஞ்சல் கோட்ட உதவி செயலாளர் விஜயபாலாஜி முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் சங்கத்தின் செயல் தலைவர் செல்வகணேசன், நிர்வாகிகள் சரவணன், வெங்கடேசன் உட்பட அஞ்சல் துறை ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
Next Story






