என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மூதாதையர்களுக்கு தர்ப்பணம் கொடுத்த பொதுமக்கள்
    X

    மூதாதையர்களுக்கு தர்ப்பணம் கொடுத்த பொதுமக்கள்

    • ஆடுதுறையில் மாசிமகத்தையொட்டி ஏராளமானவர்கள் குவிந்தனர்
    • குற்றம் பொறுத்தவர் அபராதரட்சகர் கோவிலில் சாமி கும்பிட்டு சென்றனர்

    அகரம்சீகூர்,

    அகரம்சீகூர் அடுத்து பெரம்பலூர் மாவட்டம் சு.ஆடுதுறை ஊராட்சியில் குற்றம் பொறுத்தவர் அபராதரட்சகர் கோவிலில் மாசிமகத்சுதை முன்னிட்டு.ஆடுதுறை சுற்றுவட்டாரத்தில் உள்ள பொதுமக்கள் இறந்து போன தனது பெற்றோர்கள் மற்றும் மூதாதையர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். வெள்ளாற்றங்கரையில் உள்ள நீர் நிலைகளில் பொதுமக்கள் திரளானோர் வரிசையாக அமர்ந்து தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்த பின்பு சாமி தரிசனம் செய்தனர். இதில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×