என் மலர்
உள்ளூர் செய்திகள்

குற்ற வழக்குகளில் 2 பேருக்கு அபராதம்
- குற்ற வழக்குகளில் 2 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
- வழக்கில் சிறப்பாக செயல்பட்ட போலீசாருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவி பாராட்டினார்.
பெரம்பலூர் :
பெரம்பலூர் மாவட்டம், வி.களத்தூர் போலீஸ் நிலையத்தில் கடந்த 2011-ம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட 2 குற்ற வழக்குகளின் விசாரணை பெரம்பலூர் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று, தீர்ப்பு அளிக்கப்பட்டது. இதில் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்ட நெய்குப்பை கிழக்கு தெருவை சேர்ந்த ஜெயக்குமார், ஆறுமுகம் ஆகியோருக்கு தலா ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்து, தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி தீர்ப்பு அளித்தார். மேற்படி குற்ற வழக்கில் சிறப்பாக செயல்பட்ட போலீசாருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவி பாராட்டினார்.
Next Story






