என் மலர்

    உள்ளூர் செய்திகள்

    பெரம்பலூரில் வீட்டின் பூட்டை உடைத்து நகை-பணம் திருட்டு
    X

    பெரம்பலூரில் வீட்டின் பூட்டை உடைத்து நகை-பணம் திருட்டு

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பெரம்பலூரில் வீட்டின் பூட்டை உடைத்து நகை-பணம் திருட்டு போனது
    • இந்த சம்பவம் குறித்து பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை, பணத்தை திருடி தப்பி ஓடிய மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.


    பெரம்பலூர்:

    பெரம்பலூர் முத்துலட்சுமி நகர், 5-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் மணிமேகரன் (வயது 35). இவரது மனைவி ரங்கீலாவுக்கு குழந்தை பிறந்ததால், அவர் சேலம் மாவட்டம், ஆத்தூரில் உள்ள பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறார். இதனால் மணிமேகரனுடன் தாய் சந்தானலட்சுமி வசித்து வருகிறார். மணிமேகரனின் தந்தை ராமராஜ் வாலிகண்டபுரத்தில் மரப்பட்டறை வைத்து தொழில் செய்து வருகிறார். மேலும் அவர் அங்குள்ள வீட்டில் வசித்து வருகிறார். கடந்த 21-ந்தேதி மாலை மணிமேகரனும், சந்தானலட்சுமியும் வாலிகண்டபுரத்தில் உள்ள வீட்டிற்கு சென்றனர். பின்னர் அவர்கள் நேற்று முன்தினம் இரவு பெரம்பலூரில் உள்ள வீட்டிற்கு திரும்பினர்.

    அப்போது வீட்டின் முன்பக்க இரும்பு கதவின் பூட்டும், கதவும் உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து, அவர்கள் வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது, பீரோவில் இருந்த ரூ.45 ஆயிரம், 1 பவுன் மோதிரம், 50 கிராம் வெள்ளி காசு ஆகியவை திருட்டு போயிருந்தது. இந்த சம்பவம் குறித்து பெரம்பலூர் போலீசாருக்கு மணிமேகரன் தகவல் தெரிவித்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்கள் வந்து தடயங்களை சேகரித்தனர். இதற்கிடையே போலீஸ் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. அந்த நாய் சிறிது தூரம் ஓடியது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. இந்த சம்பவம் குறித்து பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை, பணத்தை திருடி தப்பி ஓடிய மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.


    Next Story
    ×