என் மலர்
உள்ளூர் செய்திகள்

விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
- பா.ஜ.க. பட்டியல் அணி தலைவரை கைது செய்ய கோரி
- விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
பெரம்பலூர்:
பெரம்பலூர் புதுபஸ்ஸ்டாண்ட் வளாகத்தில் மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் தமிழ்மாணிக்கம் தலைமை வகித்தார். இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்திருமாவளன் மீது தொடர்ந்து அவதூறுகளை பரப்பி வருவதாக கூறி பா.ஜ.க. பட்டியல் அணி தலைவர் தடா பெரியசாமியை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய காவல்துறை நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தி கோஷமிட்டனர். இதில் கட்சி நிர்வாகிகள் வீரசெங்கோலன், வக்கீல் ஸ்டாலின், உதயக்குமார், நகராட்சி கவுன்சிலர் தங்க சண்முக சுந்தரம் மற்றும் மாவட்ட மார்க்சிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் ரமேஷ், மாநில செயற்குழு உறுப்பினர் செல்லதுரை, இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் ஜெயராமன், மாநில செயற்குழு உறுப்பினர் ஞானசேகரன், தமிழ் இயக்கக மாவட்ட தலைவர் தேனரசன் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.






