என் மலர்
உள்ளூர் செய்திகள்

விடுதலை சிறுத்தைகள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
- பெரம்பலூரில் விடுதலை சிறுத்தைகள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
- பிளாஸ்டிக்-போதை பொருட்களை ஒழிக்கக்கோரி ஆர்ப்பாட்டம்
பெரம்பலூர்,
பெரம்பலூர் மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் நேற்று மாலை கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் மாவட்ட செயலாளர் தமிழ் மாணிக்கம் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட கட்சியினர் பிளாஸ்டிக் மற்றும் போதை பொருள் ஒழிப்பு குறித்து பல்வேறு கோஷங்களை எழுப்பினர். பிளாஸ்டிக் மற்றும் போதை பொருட்களை முற்றிலுமாக ஒழிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர். பின்னர் அவர்கள் கலெக்டர் கற்பகத்தை சந்தித்து பிளாஸ்டிக்-போதை பொருள் ஒழிப்பு குறித்த மனுவினை அளித்தனர்.
Next Story






