என் மலர்
உள்ளூர் செய்திகள்

பெரம்பலூரில் தொழிலாளர்களுக்கான சட்ட விழிப்புணர்வு முகாம்
- பெரம்பலூரில் தொழிலாளர்களுக்கான சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது
- சட்ட ஆலோசனைகளை இலவசமாக பெற 1800 425 2441 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்
பெரம்பலூர்,
பெரம்பலூரில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் தொழிலாளர்களுக்கான சட்ட விழிப்புணர்வு முகாம் நடந்தது. முகாமிற்கு மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளரும், சப்-கோர்ட் நீதிபதியுமான சந்திரசேகர் தலைமை வகித்து பேசுகையில், தொழிலாளர் நலன் குறித்தும், அவர்களுக்கு உரிய முறையில் பணி செய்யும் இடத்தில் அனைத்து வசதிகளும் கிடைப்பதற்கும், பணி நேரம் அரசு விதிகளின்படி உள்ளதா என்பதை தொழிலாளர்கள் தெரிந்து கொள்ளவேண்டும்.
தொழிலாளர்களுக்கு பிரச்சினை ஏற்பட்டால் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவில் புகார் அளித்தால், அந்த பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்று தரப்படும். சட்ட ஆலோசனைகளை இலவசமாக பெற 1800 425 2441 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம். தொழிலாளர் நல சங்கத்தில் உள்ளவர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்படும். அனைத்து தொழிலாளர்களும் தொழிலாளர் நல சட்டம் பற்றி தெரிந்துகொள்ளவேண்டும் என்று பேசினார்.
மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு வக்கீல் செல்வம், அரியலூர் தொழிலாளர் உதவி ஆய்வாளர் சம்பத், குடிமக்கள் நுகர்வோர் மன்றங்களின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கதிரவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் முதுநிலை நிர்வாக உதவியாளர் கலைவாணன் வரவேற்றார். முடிவில் மேசியா தொழிலாளர் நல சங்கத்தின் பொதுச் செயலாளர் டேனியல் நன்றி கூறினார்.






