என் மலர்
உள்ளூர் செய்திகள்

இந்திய தொழிலாளர் கட்சி ஆர்ப்பாட்டம்
- இந்திய தொழிலாளர் கட்சி ஆர்ப்பாட்டம் நடந்தது
- அடிப்படை வசதிகள் செய்துதர கோரி நடந்தது
பெரம்பலூர்:
பெரம்பலூர் அருகே விளாமுத்தூர் கிராமத்தில் அடிப்படை வசதிகளை செய்துதர வலியுறுத்தியும், கந்துவட்டி வசூலை கண்டித்தும் இந்திய தொழிலாளர் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
பெரம்பலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு கட்சி தலைவர் ஈஸ்வரன் தலைமை வகித்தார். இதில், பெரம்பலூர் மாவட்டத்தில் தனியார் நிதி நிறுவனங்கள், மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் வழங்குகிறோம்ய என்கிற பெயரில் அதிகமான வட்டிக்கு கடன் கொடுத்தும், கடன் கட்டாதவர்களை கட்டப்பஞ்சாயத்து கும்பலை வைத்து மிரட்டி வசூலிக்கும் கந்து வட்டி கும்பலின் அடாவடித்தனத்தை கட்டுப்படுத்தவேண்டும்.
நொச்சியம் ஊராட்சிக்குட்பட்ட விளாமுத்தூர் கிராமத்தில் வசிக்கும் அருந்ததியர் சமுதாய மக்களுக்கு சுடுகாட்டு பாதை சீரமைக்கவேண்டும், கழிவுநீர் வாய்க்கால் அமைத்து தர வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கோஷமிட்டனர். இதில் கட்சியினர் மற்றும் கிராம பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.






