என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெரம்பலூரில் கஞ்சா வியாபாரி கைது
    X

    பெரம்பலூரில் கஞ்சா வியாபாரி கைது

    • லெப்பைக்குடிகாடு கிராமத்தில் கஞ்சா விற்ற வியாபாரி கைது செய்யப்பட்டு உள்ளார்
    • அவரிடம் இருந்து 1.2 கிலோ கஞ்சா பறிமுதல்

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் மாவட்டம் மங்களமேட்டை அடுத்துள்ள லெப்பைக்குடிகாடு கிராமத்தில் சிலர் கஞ்சா விற்பதாக பல்வேறு புகார்கள் வந்தன. அதன்பேரில் மங்களமேடு இன்ஸ்பெக்டர் நடராஜன் தலைமையிலான போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அங்குள்ள ஆலமரத்தின் அடியில் வாலிபர் ஒருவர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் மடக்கி பிடித்தனர். விசாரணையில் அவர் ஜமாலயா நகரை சேர்ந்த நியாஸ் அகமது (வயது 30) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 1 கிலோ 200 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

    Next Story
    ×