search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சிறப்பு பொருளாதார மண்டலம் திட்டத்திற்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்களை விவசாயிகளிடம் ஒப்படைக்கவேண்டும் - மா.கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்
    X

    சிறப்பு பொருளாதார மண்டலம் திட்டத்திற்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்களை விவசாயிகளிடம் ஒப்படைக்கவேண்டும் - மா.கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

    • அரியலூர் மாவட்டத்தில் ஜெயங்கொண்டம் அனல்மின் நிலக்கரி திட்டத்திற்கு கையகப்படுத்திய நிலத்தை நிலம் கொடுத்த விவசாயிகளிடமே அரசு திரும்ப ஒப்படைத்து அவர்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்றி உள்ளது.
    • விவசாயிகளுக்கு சொந்தமான 3 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்களை சிறப்பு பொருளாதார மண்டலம் அமைப்பதாக கூறி கையகப்படுத்திய நிலங்களை விவசாயிகளிடம் திரும் ஒப்படைத்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்க வேண்டும்.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் துறைமங்கலத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் மா.கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் கலையரசி தலைமை வகித்தார்.

    கூட்டத்தில் அரியலூர் மாவட்டத்தில் ஜெயங்கொண்டம் அனல்மின் நிலக்கரி திட்டத்திற்கு கையகப்படுத்திய நிலத்தை நிலம் கொடுத்த விவசாயிகளிடமே அரசு திரும்ப ஒப்படைத்து அவர்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்றி உள்ளது.

    அதே போல பெரம்பலூர் மாவட்டத்தில் திருமாந்துறை, எறையூர் சர்க்கரைஆலை, பெருமத்தூர், மிளாகநத்தம், லெப்பைகுடிகாடு, அயன்பேரையூர் உள்ளிட்ட 8க்கும் மேற்பட்ட கிராமங்களிலுள்ள விவசாயிகளுக்கு சொந்தமான 3 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்களை சிறப்பு பொருளாதார மண்டலம் அமைப்பதாக கூறி கையகப்படுத்திய நிலங்களை விவசாயிகளிடம் திரும் ஒப்படைத்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்க வேண்டும்.

    ஜூலை 17ம்தேதி பெரம்பலூர் மாவட்டத்தில் நடைபெறவுள்ள அரசியல் விளக்க நிதியளிப்பு பொதுக்கூட்டத்திற்கு வருகை தரும் கட்சி மாநில செயலாளர் பாலகிருஷ்ணனுக்கு சிறப்பான முறையில் வரவேற்பு அளிப்பது போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    இதில் நிர்வாகிகள் ராஜேந்திரன், கருணாநிதி, சிவானந்தம், செல்லமுத்து, செல்லதுரை உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    Next Story
    ×