என் மலர்
உள்ளூர் செய்திகள்

அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
- தமிழக அரசை கண்டித்து நடைபெற்றது
- அரசு ஊழியர்களின் கோரிக்கை பற்றி பட்ஜெட்டில் இல்லை என்று குற்றச்சாட்டு
பெரம்பலூர்,
தமிழக அரசு பட்ஜெடில் அரசு ஊழியர்களின் கோரிக்கை குறித்து எந்தவித அறிவிப்பும் செய்யாததை கண்டித்து அரசு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.பெரம்பலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட இணை செயலாளர் சுப்ரமணியன் தலைமை வகித்து பேசுகையில், தமிழக பட்ஜெட் 2023- 24 உரையில் பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்துள்ள போதிலும் அரசு ஊழியர்களின் கோரிக்கை குறித்து எவ்வித அறிவிப்பும் இல்லாதது, அரசு ஊழியர்களிடையே மிகுந்த ஏமாற்றத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. இதனால் அரசு ஊழியர்களை நம்ப வைத்து ஏமாற்றிய அரசாக தமிழ்நாடு அரசு மாறியுள்ளது . எனவே இனியும் தமிழ்நாடு அரசின் ஏமாற்றப் போக்கினையும் நயவஞ்சக வார்த்தைகளையும் கேட்டு ஏமாற தயாராக இல்லை என தெரிவித்தார். பின்னர் தமிழக அரசை கண்டித்தும், பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்ப டுத்தவேண்டும் எனவும் கோஷமிட்டனர்.






