search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கல்வி மேலாண்மை குழு தலைவருக்கு கொலை மிரட்டல்
    X

    கல்வி மேலாண்மை குழு தலைவருக்கு கொலை மிரட்டல்

    • கல்வி மேலாண்மை குழு தலைவருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக மனு அளிக்கப்பட்டுள்ளது.
    • தலைமையாசிரியர் மீது நடவடிக்கை கோரி மனு

    பெரம்பலூர்:

    கல்வி மேலாண்மை குழு தலைவர் மற்றும் உறுப்பினர்களை தகாத வார்த்தைகளால் திட்டி, கொலை மிரட்டல் விடுத்த தலைமையாசிரியர் மீது நடவடிக்கை எடுக்க கோரிகலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது.

    பெரம்பலூர் மாவட்டம் அம்மா பாளையம் கிராமத்தில் கல்வி மேலாண்மை குழு தலைவர் அமுதா தலைமையில் கலெக்டர் ஸ்ரீவெங்க டபிரியா மற்றும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவழகன் ஆகியோரிடம் அளித்த மனுவில் தெரிவித்துள்ளதாவது, அம்மாபாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில், கடந்த 29ம் தேதி அன்று கல்வி மாலை மேலாண்மை குழு கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

    இதில் பள்ளிக்கு மேலாண்மை குழுவின் மூலம் பள்ளிக்கு தண்ணீர் வசதி இல்லாதது, சத்துணவு குறைபாடு மற்றும் கழிப்பறை குறித்து சில குறைகள் தெரிவித்து அதனை சரி செய்ய கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    இதனை அடுத்து கடந்த 1ம்தேதி பள்ளி தலைமை ஆசிரியர் மணிமொழி மேலாண்மை குழு தலைவர் அமுதாகிய எனக்கு பள்ளிக்கு வருமாறு செல்போன் மூலம் அழைப்பு விடுத்தார். நானும் பள்ளிக்கு சென்றேன். அதன் பின்பு பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் சில ஆசிரியர்கள் என் முகத்தில் தீர்மானம் போட்ட பேப்பரை விட்டு எரிந்து நீங்கள் யார் என்னை கேள்வி கேட்க என்றும், ஒருமையில் தகாத வார்த்தைகளில் அனைவரையும் திட்டி கொலை மிரட்டல் விடுத்தார்.

    எனவே தலைமை ஆசிரியர் மணிமொழி மீது நடவடிக்கை மேற்கொண்டு தலைமை ஆசிரியர் பணி மாறுதல் செய்யும்படி அனைவரும் ஒன்று சேர்ந்து தீர்மானம் நிறைவேற்றுகின்றோம், விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது.

    Next Story
    ×