என் மலர்
உள்ளூர் செய்திகள்

பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம்
- பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
- நிர்வாகத்தின் மீது வழக்கு தொடுக்க வேண்டும்
பெரம்பலூர்:
சேலம் பெரியார் பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வில் சாதி குறித்த சர்ச்சை கேள்வி இடம்பெற்றதை கண்டித்து பெரம்பலூர் மாவட்ட பா.ஜ.க. சார்பில் கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் மாவட்ட தலைவர் செல்வராஜ் தலைமை தாங்கினார். இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட கட்சியின் பட்டியல் அணி மாநில தலைவர் தடா பெரியசாமி கண்டனம் தெரிவித்து பேசினார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் சேலம் பெரியார் பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வில் சாதி குறித்த சர்ச்சை கேள்வி இடம்பெற்ற விவகாரம் தொடர்பாக தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் மன்னிப்பு கேட்க வேண்டும். அந்த பல்கலைக்கழக நிர்வாகத்தின் மீது வழக்கு தொடுக்க வேண்டும் என்று கோஷங்களை எழுப்பினர்.
Next Story






