என் மலர்
உள்ளூர் செய்திகள்

பள்ளி இரும்பு கேட்டு விழுந்து மாணவனின் கால் எலும்பு முறிவு
- தனியார் மருத்துவமனையில் சிகிச்சை
- போலீசார் விசாரணை
அகரம்சீகூர்,
பெரம்பலூர் மாவட்டம் வாலிகண்டபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட தம்பை கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் தம்பை மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த சரண்ராஜ் மகன் முகேஷ் (வயது10) என்பவர் 4ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று வழக்கம் போல் காலை பள்ளிக்கு வந்த சரண்ராஜ், காம்பவுண்ட் இரும்பு கதவை திறந்து உள்ளார். அப்போது கதவின் மேல் கொண்டியில் தேய்மானம் ஏற்பட்டிருந்ததால் மாணவனின் இடது தொடை மீது இரும்பு கேட் விழுந்துள்ளது. இதில் மாணவனின் இடது கால் தொடை பகுதி எலும்பு முறிவு ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆசிரியர்கள் மாணவனை மீட்டு பெரம்பலூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக மங்களமேடு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.






