என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    செட்டிகுளம் மாவிலங்கு பகுதியில் வேட்டையாட வந்த 6 பேருக்கு ரூ.90 ஆயிரம் அபராதம்
    X

    செட்டிகுளம் மாவிலங்கு பகுதியில் வேட்டையாட வந்த 6 பேருக்கு ரூ.90 ஆயிரம் அபராதம்

    • செட்டிகுளம் மாவிலங்கு பகுதியில் வேட்டையாட வந்த 6 பேருக்கு ரூ.90 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது
    • வனச்சரக அலுவலர் பழனி குமரன், வனவர் குமார், வனக்காப்பாளர்கள் மணிகண்டன் மற்றும் .அன்பரசு ஆகியோர் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    குன்னம்:

    பெரம்பலூர் மாவட்ட வன அலுவலர் குகனேஷ் உத்தரவின் பேரில் வனச்சரக அலுவலர் பழனி குமரன், வனவர் குமார், வனக்காப்பாளர்கள் மணிகண்டன் மற்றும் .அன்பரசு ஆகியோர் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது இருசக்கர வாகனங்களில் சிலர் டார்ச் லைட் வேட்டை நாய்களுடன் சென்று கொண்டிருந்தது தெரிய வந்தது. செட்டிகுளம் அடுத்த மாவிலங்கை பகுதியில் மடக்கி பிடித்த வனத்துறையினர், அவர்களிடம் விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் பெரம்பலூர் மாவட்டம் கண்ணபாடியை சார்ந்த செந்தமிழ்ச்செல்வன் என்பவரது தலைமையில் திருச்சி மாவட்டத்தை சார்ந்த கீர்த்திவாசன், ரகுராம் உள்ளிட்ட 6 நபர்கள் அடங்கிய குழுவினர் 3 வேட்டை நாய்கள் மற்றும் சில டார்ச் லைட்டுகள் எடுத்துக் கொண்டு 3 இருசக்கர வாகனங்களில் வனவிலங்குகளை வேட்டையாட சென்று கொண்டிருப்பது தெரிய வந்தது. மேலும் வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டதில் திருச்சி மாவட்டத்திலிருந்து வீடு செப்பனிடும் வேலை செய்வதற்காக ஐந்து நபர்களும் கண்ணபாடியை சார்ந்தசெந்தமிழ் செல்வன் வீட்டிற்கு வந்திருந்த நிலையில் செந்தமிழ் செல்வன் தூண்டுதலின் பேரில் வேட்டைக்கு புறப்பட்டு வந்ததாக தெரிவித்தனர். மேலும் அவர்கள் தாங்கள் வேட்டையாட வந்ததாக ஒப்புக்கொண்டு இணக்க கட்டணம் கட்ட சம்மதித்ததின் பேரில் வனத்துறையினர் அவர்களுக்கு ரூ.90 ஆயிரம் இணக்க கட்டணம் விதித்தனர்.

    Next Story
    ×