என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோத்தகிரியில் மக்கள் அதிகாரம் அமைப்பினர் ஆர்ப்பாட்டம்
    X

    கோத்தகிரியில் மக்கள் அதிகாரம் அமைப்பினர் ஆர்ப்பாட்டம்

    • ஆர்ப்பாட்டத்தில் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
    • மழையில் நனைந்தபடி கோஷங்களை எழுப்பினர்.

    அரவேணு,

    நீலகிரி மாவட்டம், கோத்தகிரி மார்க்கெட் திடலில் முற்போக்கு மக்கள் மேடை சார்பில் விழுப்புரம் மேல்பாதி கிராமத்தில் உள்ள திரவுபதி அம்மன் கோவிலில் தாழ்த்தப்பட்டோர் உட்பட அனைவருக்கும் சமவழிபாட்டு உரிமை வழங்க வேண்டும் என்பவை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

    இதில் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாவட்ட பொருளாளர் ரவி, மாவட்ட இணை செயலாளர் வெங்கட், செயற்குழு உறுப்பினர் ராஜா, ரத்த தானம் நண்பர்கள் குழு செல்வம் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அப்போது கனமழை குறுக்கிட்டது. இருந்தபோதிலும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மழையில் நனைந்தபடி கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

    Next Story
    ×