என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  கடையத்தில் லாரியை சிறைபிடித்து பொதுமக்கள் திடீர் போராட்டம்
  X

  லாரியை சிறைபிடித்த பொதுமக்களை படத்தில் காணலாம்.

  கடையத்தில் லாரியை சிறைபிடித்து பொதுமக்கள் 'திடீர்' போராட்டம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • குவாரிகளில் இருந்து பாறைகளை வெட்டி எடுத்து கேரளாவிற்கு கொண்டு செல்கின்றனர்.
  • கல்குவாரிகளால் நிலத்தடி நீர்மட்டம் பாதிப்பு அடைந்ததாக கூறப்படுகிறது.

  கடையம்:

  தென்காசி மாவட்டம் கடையம் பகுதியில் ஏராளமான கல்குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த குவாரிகளில் இருந்து பாறைகளை வெட்டி எடுத்து 10 வீல் முதல் 20 வீல் டாரஸ் லாரிகள் மூலம் கேரளாவிற்கு கொண்டு செல்கின்றனர்.

  மேலும் இவ்வகையான லாரிகள் ஆலங்குளம் முதல் கடையம் வரை உள்ள பிரதான சாலையை அதிகமாக பயன்படுத்து கின்றனர்.

  இந்த லாரிகள் அதிக எடை உள்ள கனிம வளங்களை எடுத்து வருவதால் கீழ கடையம் ரெயில்வே சாலை மிக மோசமான நிலைக்கு தள்ளப்பட்டு மண் சாலை போல குண்டும் குழியுமாக மாறிவிட்டது. இதனால் பள்ளி குழந்தைகள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகப் பெரிய பாதிப்படைந்துள்ளனர்.

  மேலும் இப்பகுதியில் உள்ள கல்குவாரிகளால் விவசாய நிலங்கள் மற்றும் நிலத்தடி நீர்மட்டம் மிகப் பெரிய பாதிப்பு அடைந்ததாக கூறப்படுகிறது.

  இது சம்பந்தமாக கடையம் அனைத்து கிராம பஞ்சாயத்து தலைவர்கள் கூட்டமைப்பு சார்பாக குவாரியை தடை செய்ய தீர்மானம் நிறைவேற்றியும், கிராமசபை கூட்டத்தில் தீர்மானம் வைத்தும், உயர் அதிகாரிகளை சந்தித்து மனு அளித்தும் எந்த ஒரு பயனும் இல்லாத காரணத்தினால் நேற்று கீழக்கடையம் பஞ்சாயத்து தலைவர் பூமிநாத் பொதுமக்கள் சிலருடன் சேர்ந்து ஜே.சி.பி.யை கொண்டு கடையம் ெரயில்வே சாலையில் 5 அடி தூரம் க பள்ளம் தோண்டி கனிம வளங்களை கொண்டு வரும் டாரஸ் லாரிகள் இச் சாலையை பயன்படுத்த முடியாதவாறு செய்து தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர்.

  இந்த நிலையில் இன்று காலையும் வழக்கம்போல இச்சாலை வழியே டாரஸ் லாரிகள் கற்களை ஏற்றிச் சென்றன. இதனால் ஆவேசமடைந்த பொதுமக்கள் தலைவர் பூமிநாத் தலைமையில் அவ்வழியே கற்களை ஏற்றிச் சென்ற லாரியை மடக்கி பிடித்து சிறைபிடித்து போராட்டம் நடடத்தினர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

  Next Story
  ×