search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காணும் பொங்கலையொட்டி நெல்லை சுற்றுலா தலங்களில் குவிந்த பொதுமக்கள்

    • தமிழகம் முழுவதும் பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. சென்னை போன்ற வெளி மாவட்டங்களில் பணி செய்து வருபவர்கள் பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த ஊர் வந்துள்ளார்கள்.
    • நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் தைப் பொங்கலுக்கு மறுநாள் காணும் பொங்கலாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதைத்தொடர்ந்து பொதுமக்கள் சுற்றுலா தலங்கள் அதிக அளவில் குவிந்தனர்.

    நெல்லை:

    தமிழகம் முழுவதும் பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. சென்னை போன்ற வெளி மாவட்டங்களில் பணி செய்து வருபவர்கள் பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த ஊர் வந்துள்ளார்கள்.

    இன்று மாட்டுப்பொங்கல் சிறப்பாக கொண்டாடப்பட்டது. நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் தைப் பொங்கலுக்கு மறுநாள் காணும் பொங்கலாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதைத்தொடர்ந்து பொதுமக்கள் சுற்றுலா தலங்கள் அதிக அளவில் குவிந்தனர்.

    களக்காடு தலையணை, அகஸ்தியர் அருவி, பாபநாசம் கோவில், சொரிமுத்து அய்யனார் கோவில், கடனா, ராமநதி அணைகள் மற்றும் குற்றால அருவிகளில் இன்று பொதுமக்கள் குடும்பத்துடன் குவிந்தனர். அவர்கள் வீட்டில் சமைத்த உணவுகளை சுற்றுலா தலங்களுக்கு எடுத்து சென்று அங்கு குடும்பத்துடன் அமர்ந்து சாப்பிட்டு காணும் பொங்கலை உற்சாகமாக கொண்டாடினர்.

    இதேபோல் நெல்லை மாநகர் பகுதிகளில் உள்ள மாவட்ட அறிவியல் மையம், தாமிரபரணி ஆற்றங்கரையோரங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் இன்று அதிக அளவு மக்கள் கூட்டம் காணப்பட்டது.

    பொங்கல் பண்டியையொட்டி இன்று பல்வேறு இடங்களிலும் விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. இதில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை கலந்து கொண்டனர். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் வழங்கப் பட்டது. காணும் பொங்கலை யொட்டி நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தது.

    சுற்றுலா தலங்கள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் இன்று போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.

    Next Story
    ×