என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்
வைகை அணைப்பகுதியில் மின் விளக்குகள் இல்லாததால் பொதுமக்கள் அச்சம்
- வைகை அணை பஸ் நிலையம் பல ஆண்டுகளாக பராமரிப்பி ன்றி காணப்படுகிறது.
- தேனி மார்க்கமாக செல்லும் ரவுண்டானா பகுதிகளில் மின் விளக்குகள் இல்லை. இதனால் இரவு நேரங்களில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது.
ஆண்டிபட்டி:
ஆண்டிபட்டி அருகே வைகை அணை சிறந்த சுற்றுலா தலமாக விளங்கு கிறது. தமிழகம் மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுற்றுலா பயணி கள் வருகின்றனர். வைகை அணை பஸ் நிலையம் பல ஆண்டுகளாக பராமரிப்பி ன்றி காணப்படு கிறது.
இதனால் புதர் மண்டி விஷ ஜந்துக்களின் கூடாரமாக உள்ளது. பயணிகள் பெரும்பாலும் ரவுண்டானா பகுதியிலேயே பஸ்சுக்காக காத்திருக்கி ன்றனர். மேலும் இதன் அருகேயே போலீஸ் நிலையம் உள்ளது. இந்த சாலை மற்றும் வருசநாடு, தேனி மார்க்கமாக செல்லும் ரவுண்டானா பகுதிகளில் மின் விளக்குகள் இல்லை. இதனால் இரவு நேரங்களில் இருள் சூழ்ந்து காணப்படு கிறது.
ஞாயிற்றுக்கிழமை மற்றும் பண்டிகை நாட்க ளில் அதிக அளவு சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இருள் சூழ்ந்து காணப்படும் வைகை அணைப்பகுதியில் காத்திருக்க அவர்கள் அச்சமடைந்து வருகின்றனர். இதனை பயன்படுத்தி வழிப்பறி கொள்ளையர்கள் கைவரிசை காட்டும் வாய்ப்பும் உள்ளது.
எனவே மின் விளக்கு வசதி செய்து தர வேண்டும் என சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






