search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    பாவூர்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு
    X

    பாவூர்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்றபோது எடுத்தபடம்.

    பாவூர்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு

    • பதவியேற்பு விழாவிற்கு பாவூர்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்கத்தின் மூத்த தலைவர் செல்வராஜ் தலைமை தாங்கினார்.
    • அரசுத்தேர்வில் 100 சதவீத தேர்ச்சி பெற்ற வெள்ளைபனையேறிப்பட்டி பள்ளிக்கு கேடயம்,பரிசு வழங்கப்பட்டது.

    தென்காசி:

    பாவூர்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்கத்தின் 18-வது ஆண்டு புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா கீழப்பாவூரில் நடைபெற்றது.

    பாவூர்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்கத்தின் மூத்த தலைவர் செல்வராஜ் தலைமை தாங்கினார். கலைச்செல்வன், முருககிங்ஸ்டன், திருமலைக்கொழுந்து, ஆனந்த் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    உடனடி முன்னாள் தலைவர் அருணாசலம் என்ற அந்தமான் அருண் வரவேற்றார். அறிவழகன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

    புதிய நிர்வாகிகளை முன்னாள் கூட்டு மாவட்டத்தலைவர் பிரகாஷ் பதவியில் அமர்த்தினார். தலைவராக இளங்கோ, செயலாளராக முருகன், பொருளாளராக பரமசிவன், முதல் துணைத்தலைவராக சுரேஷ், 2ம் துணைத்தலைவராக ஆனந்த், 3ம் துணைத்தலைவராக சிநேகாபாரதி, சங்க நிர்வாகியாக செல்வராஜ், சங்க உறுப்பினர் குழு தலைவராக வெண்ணிநாடார், சேவைத்தலைவராக அருணாச்சலம், சங்க அறக்கட்டளை பொறுப்பா ளராக ஞானசெல்வன், சங்க தகவல் தொடர்புத்தலைவராக லெட்சுமிசேகர் ஆகியோர் பதவியேற்றுக்கொண்டனர்.

    மேலும் முதலாம் ஆண்டு இயக்குனர்களாக திருப்பாண்டியராஜ், ராஜீ, மதியழகன், ராமசாமி என்ற தமிழ்செல்வன், 2-ம் ஆண்டு இயக்குனர்களாக சொக்கலிங்கம், ராஜேந்திரன்,கவுதமன், மாயவநாதன், அருணாசல முத்துசாமி, ராஜேந்திரன், ராமச்சந்திரபாண்டி, ஸ்ரீமுருகன் ஆகியோரும் பதவியேற்றுக்கொண்டனர்.

    ஞானசேகரன், ஜாண்சன், ஜெயன், சுப்பு ராஜ், ராஜாமணி, முருகேசன்,பாவநாசம் என்ற முத்துகுமார், சரோஜா, ஆனந்த் ஆகியோர் புதிய உறுப்பினர்களாக பதவியேற்றனர். நிகழ்ச்சியில் உறுப்பினர்கள் செல்வகுமார், ராஜலிங்கராஜா, ராஜா, சிவகுமார் ஆகியோர் கலந்துகொண்டனர்.

    முன்னதாக விழாவில் லதாஇளங்கோ, ரேவதி முருகன், முத்தமிழ்பரமசிவம், தமிழரசி, சிநேகா பாரதி ஆகியோர் குத்துவிளக்கேற்றினர்.

    2021-2022 ஆண்டு செயலர் அறிக்கையை சங்கச்செயலாளர் சுரேஷ் அளித்தார் . புதிய நிர்வாகிகளை கலைச்செல்வனும், உறுப்பி னர்களை ஜேக்கப்சுமனும் அறிமுகப்படுத்தினர். வட்டார தலைவர் செல்வம் வாழ்த்தி பேசினார். விழாவில், அரசுத்தேர்வில் 100 சதவீத தேர்ச்சி பெற்ற வெள்ளைபனையேறிப்பட்டி பள்ளிக்கு கேடயம்,பரிசு வழங்கப்பட்டது.

    முன்னாள் கூட்டுறவு வங்கித்தலைவர் பால்துரை , வட்டார நெல் அரிசி வியாபாரிகள் சங்க தலைவர் கருத்தபாண்டிநாடார் , இலக்கிய மன்ற தலைவர் செல்வன் , தொழிலதிபர் கோல்டன் செல்வராஜ் உள்ளிட்டோர் வாழ்த்தி பேசினர். சங்கப்பொருளாளர் பரமசிவன் நன்றி கூறினார்.

    Next Story
    ×