என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மேட்டுப்பாளையம் அருகே தென்திருமலை பெருமாள் கோவிலில் பவித்ரோற்சவம்
    X

    மேட்டுப்பாளையம் அருகே தென்திருமலை பெருமாள் கோவிலில் பவித்ரோற்சவம்

    • ஸ்ரீமலையப்பசாமிகள், தாயாருடன் பவித்ரமாலை அணிந்து மாட வீதிகளில் எழுந்தருளினர்
    • பக்தர்கள் திரளாக பங்கேற்று தரிசனம் செய்தனர்

    மேட்டுப்பாளையம்,

    மேட்டுப்பாளையம் அருகே உள்ள ஆலாங்கொம்பு தென்திருமலை திருப்பதி ஸ்ரீவாரி கோவிலில் ஆவணி மாத பவித்ரோற்சவம் தொடங்கியது. அப்போது மாலை நேரத்தில் புண்ணியாக வாஜனம், மேதினி பூஜை, பூர்ணாஹூதி, திருவாராதனம், மந்திரபுஷ்பம், பிரபந்த சாற்றுமுறை, பிரசாத கோஷ்டி, ஏகாந்த சேவை நடைபெற்றது.

    தென்மலை திருப்பதி ஸ்ரீவாரி கோவிலில் பவித்ரோற்சவத்தின் 2-ம் நாள் நிகழ்ச்சியான சுப்ரபாதத்துடன் நிகழ்ச்சிகள் தொடங்கியது. பின்னர் புண்ணியாக வாஜனம், பூர்ணாஹூதி, திருவாராதனம், சாற்றுமுறை, பிரசாத கோஷ்டி மற்றும் மலையப்பசாமி உடன் எழுந்தருளிய ஸ்ரீதேவி-பூதேவி தாயாருக்கும் ஸ்நபன திருமஞ்சனமும் நடத்தப்பட்டது.

    தொடர்ந்து ஸ்ரீமலையப்பசாமிகள், ஸ்ரீதேவி-பூதேவி தாயாருடன் பவித்ர மாலை அணிந்து மாட வீதிகளின் வழியாக வலம் வந்து யாக சாலையில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். அப்போது பக்தர்கள் திரளாக பங்கேற்று தரிசனம் செய்தனர்.

    Next Story
    ×