என் மலர்
உள்ளூர் செய்திகள்

நெல்லையில் கிராமப்புற அரசு பஸ்கள் முன்னறிவிப்பின்றி நிறுத்தப்படுவதால் பயணிகள் தவிப்பு
- பல கிராமங்கள் போக்குவரத்து வசதி குறைவால் நகரங்களுடன் தொடர்பு இல்லாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.
- நெல்லையில் ஏராளமான கிராமங்களுக்கு பஸ்கள் குறித்த நேரத்தில் இயக்கப்படுவதில்லை.
நெல்லை:
கொரோனா கால கட்டத்தின்போது நெல்லை மாவட்டத்தில் உள்ள கிராமப் புறங்களுக்கு இயக்கப்பட்டு வந்த பெரும் பாலான அரசு பஸ்கள் அடியோடு நிறுத்தப்பட்டது.
பொது மக்கள் புகார்
ஆனால் நிலமை சீரான பிறகும் இதுவரை பெரும் பாலான கிராமங்களுக்கு பஸ்கள் இயக்கம் சீராக இல்லை என பெரும்பா லானோர் புகார் கூறி வருகின்றனர். நெல்லையில் இருந்து மூலக்கரைப்பட்டி, முனைஞ்சிப்பட்டி, காரியாண்டி வழியாக திசையன்விளை செல்லும் ஒரு அரசு பஸ் நிறுத்தப் பட்டுவிட்டதாகவும், இதனால் மதியத்திற்கு மேல் ராமகிருஷ்ணாபுரம், காரியாண்டி சுற்றுவட்டார பகுதி மக்கள் திசையன் விளையில் உள்ள தாலுகா அலுவலகத்திற்கும், மாலை யில் நெல்லை போன்ற நகரங்களுக்கு செல்ல முடி யாமலும் தவித்து வருவ தாகவும் அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
இதேபோல் பல கிராமங்கள் போக்குவரத்து வசதி குறைவால் நகரங்க ளுடன் தொடர்பு இல்லாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. இதனால் அலுவலகம் செல்பவர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் அதிகமாக பாதிப்படை கின்றனர்.
இதுதவிர நெல்லையில் ஏராளமான கிராமங்களுக்கு பஸ்கள் குறித்த நேரத்தில் இயக்கப்படுவதில்லை. அவை எவ்வித முன்னறிவுப்பும் இன்றி நிறுத்தப்படுகிறது என பயணிகள் கூறுகின்றனர். இதுகுறித்து போக்கு வரத்து கழக அதிகாரிகள் கூறுகையில், நெல்லை, தூத்துக்குடி, நாகர்கோவில் மண்டல ங்களில் மொத்தம் 1, 773 பஸ்கள் உள்ளன. இந்த பஸ்களில் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, நாகர்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் 80 முதல் 85 சதவீத பஸ்களை மட்டுமே இயக்கப்படுகிறது என்றனர்.
போக்குவரத்து ஊழியர்கள் கூறுகையில், போக்குவரத்து பணி மனைகளில் பெரும்பாலான பஸ்கள் இயக்குவதற்கு டிரைவர், கண்டக்டர்கள் இல்லாமல் ஓரமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. குறைவான டிரைவர்களை வைத்துக்கொண்டு, அவர்களுக்கு கூடுதல் பணி நேரத்தை ஒதுக்குகின்றனர் என தெரிவித்தனர்.






