என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோத்தகிரியில் பள்ளியை முற்றுகையிட்டு பெற்றோர் போராட்டம்
    X

    கோத்தகிரியில் பள்ளியை முற்றுகையிட்டு பெற்றோர் போராட்டம்

    • சாம்பாரில் பூச்சிகள் கிடக்கிறது. வேகாத முட்டைகள் தரப்படுகிறது.
    • இனிவரும் காலங்களில் தரமற்ற உணவுகள் வழங்கப்படாது

    அரவேணு,

    நீலகிரி மாவட்டம், கோத்தகிரி பாக்கியநகரில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இங்கு 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் அந்த பள்ளியில் கடந்த சில வாரங்களாக தரமற்ற முறையில் மதிய உணவு வழங்கப்படுவதாக மாணவர்கள் தெரிவித்தனர். மேலும் சாம்பாரில் பூச்சிகள் கிடக்கிறது. வேகாத முட்டை கள் தரப்படுகிறது. போதிய குடிநீர் இல்லை, குடிநீர் தொட்டிகள் குப்பையாக உள்ளது எனவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

    இதனை தொடர்ந்து மாணவர்களின் பெற்றோர் பள்ளியை முற்றுகையிட்டு தலைமை ஆசிரியை வசந்தா, சத்துணவு அமை ப்பாளர் லட்சுமி, சத்துணவு சமையலர் பிச்சாயி ஆகியோரிடம் வாக்குவா தத்தில் ஈடுபட்டனர்.

    இதற்கிடையே ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் நேரடியாக பள்ளிக்கு வந்து விசாரணை நடத்தினார். அதன்பிறகு இனிவரும் காலங்களில் தரமற்ற உணவுகள் வழங்கப்படாது. தவறு செய்தவர்கள் மீது நடவடி க்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.

    இதனை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.கோத்தகிரி பள்ளியில் தரமற்ற உணவுகள் வழங்குவதாக கூறி மாணவர்களின் பெற்றோர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×