என் மலர்
உள்ளூர் செய்திகள்

தூத்துக்குடி பனிமய மாதா.
தூத்துக்குடியில் நாளை பனிமய மாதா ஆலய திருவிழா கொடியேற்றம்
- திருவிழாவை முன்னிட்டு இன்று மாலை பாதிரியார் லெனின் டிரோஸ் தலைமையில் திருச்சிலுவை சிற்றாலயத்தில் இருந்து நகர வீதிகளில் கொடி பவனி நடக்கிறது.
- எளியோருக்கும், திருவழிபாட்டுக்கும், பள்ளி குழந்தைகளுக்கும் உரிய பொருட்களுடன் காணிக்கை பவனி நடைபெறுகிறது.
தூத்துக்குடி:
தூத்துக்குடியில் உலக பிரசித்தி பெற்ற பனிமய மாதா பேராலய திருவிழா ஆண்டுதோறும் ஜூலை 26-ந் தேதி தொடங்கி ஆகஸ்ட் 5-ந் தேதி வரை நடைபெறும் இந்த விழாவில் லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொள்வது வழக்கம்.
கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா காரணமாக பக்தர்கள் இன்றி விழா நடந்தது. இந்த ஆண்டு வழக்கம்போல் அனைத்து நிகழ்ச்சிகளும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
திருவிழாவை முன்னிட்டு இன்று (திங்கட்கிழமை)மாலை 5 மணிக்கு திருப்பலி நிகழ்ச்சிக்குப் பின் 6மணிக்கு பாதிரியார் லெனின் டிரோஸ் தலைமையில் திருச்சிலுவை சிற்றாலயத்தில் இருந்து நகர வீதிகளில் கொடி பவனி, எளியோருக்கும் திருவழிபாட்டுக்கும் பள்ளி குழந்தைகளுக்கும் உரிய பொருட்களுடன் காணிக்கை பவனி நடைபெறுகிறது.
விழா ஏற்பாடுகளை பனிமய மாதா பேராலய அதிபரும் பங்குத்தந்தையுமான குமார்ராஜா,உதவி பங்குத்தந்தை பால் ரோமன்,களப்பணியாளர் பெல்கிளின்டன், மற்றும் பங்கு இறைமக்கள் உள்ளிட்டோர் செய்து வருகின்றனர்.






