search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குளுந்தமா காளியம்மன் கோவிலில் பங்குனி பெருவிழா
    X

    சிறப்பு மலர் அலங்காரத்தில் அருள்பாலித்த குளுந்தமா காளியம்மன்.

    குளுந்தமா காளியம்மன் கோவிலில் பங்குனி பெருவிழா

    • பக்தர்களால் ரத காவடிகளும், கோவிலில் கஞ்சி வார்த்தல் நிகழ்ச்சிகளும் நடந்தது.
    • விடையாற்றி விழாவும், மஞ்சள் நீராட்டு நிகழ்ச்சியும் நடைபெற இருக்கிறது.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டி அருகே தண்டலைச்சேரி-பருத்திச்சேரி கிராமத்தில் உள்ள குளுந்தமா காளியம்மன் கோவிலில் 77-ம் ஆண்டு பங்குனி பெருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவில் நேற்று இரவு காப்பு கட்டுதல் நிகழ்வு நடைபெற்றது.

    தொடர்ந்து, அம்மன் வெண்ணை தாழி ரிஷப, சிம்ம, அன்னம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் 7 நாட்களும் வீதி உலா நடைபெற இருக்கிறது.

    விழாவின் கடைசி நாளான 28-ந்தேதி பக்தர்களால் ரத காவடி களும், கோவிலில் கஞ்சி வார்த்தல், அன்னதானம் மற்றும் சிறப்பு நிகழ்ச்சிகளும் நடைபெற இருக்கிறது. அதைத்தொடர்ந்து விடையாற்றி விழாவும், மஞ்சள் நீராட்டு நிகழ்ச்சியும் நடைபெற இருக்கிறது.

    விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், கிராமமக்கள், இளைஞர்கள் சிறப்பாக செய்து வருகின்றனர்.

    Next Story
    ×