search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பால்குடம் ஊர்வலம்
    X

    பால்குட ஊர்வலம் நடந்தபோது எடுத்தபடம்.

    பால்குடம் ஊர்வலம்

    • கடந்த 9-ந் தேதி இரவு 7 மணிக்கு நாட்டில் கனமழை வேண்டி திருவிளக்கு பூஜையும், இரவு 10 மணிக்கு வில்லிசையும் நடந்தது.
    • இன்று வில்லிசை, மதியம் 1 மணிக்கு சிறப்பு பூஜை, அம்மன் மஞ்சள் நீராடுதல், கும்பம் தெரு வீதி உலாவும் நடக்கிறது.

    உடன்குடி :

    உடன்குடி யூனியனுக்கு உட்பட்ட பரமன்குறிச்சி அய்யனார் நகர் முத்தா ரம்மன் கோவில் கொடை விழா கடந்த 8-ந் தேதி கும்பாபிஷேகத்துடன் தொடங்கியது. மதியம் அன்னதானம் நடந்தது.

    கடந்த 9-ந் தேதி இரவு 7 மணிக்கு நாட்டில் கனமழை வேண்டி திருவிளக்கு பூஜையும், இரவு 10 மணிக்கு வில்லிசையும், இரவு 12 மணிக்கு சிறப்பு பூஜையும் நடந்தது. நேற்று காலை செல்லபிள்ளை அய்யனார் கோவிலில் இருந்து 108 பால் குடம் ஊர்வலம் தொடங்கி கோவிலை வந்தடைந்ததும், முத்தாரம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு பால் அபிஷேகம் நடந்தது. பகல் 10 மணி, இரவு 9 மணிக்கு வில்லிசையும், பகல் 12 மற்றும் இரவு 12 மணிக்கு சிறப்பு பூஜையும், அம்மன் கும்பம் வீதி உலா மற்றும் முளைப்பாரி ஊர்வலம் நடந்தது.

    இன்று வில்லிசை, மதியம் 1 மணிக்கு சிறப்பு பூஜை, அம்மன் மஞ்சள் நீராடுதல், கும்பம் தெரு வீதி உலாவும், நள்ளிரவு 1 மணிக்கு சிறப்பு பூஜையும், கும்பம் தெரு வீதி உலாவும் நடக்கிறது. நாளை (12-ந் தேதி) அதிகாலை உணவு பிரி த்தல் நிகழ்ச்சியும், நாளை மறுநாள் 13-ந் தேதி கிழக்கெத்தியான் சுவாமி கோவில் கொடை விழா நடக்கிறது.

    ஏற்பாடுகளை நிர்வாகி கள் சிவராமன் லெட்சு மணன், கணே சன் முரு கன் நாடார், கனகராஜ் சுப்புக்குட்டி, சரவணன், சந்திரசே கரன், செல்வ குமார், முத்து லிங்கம், கணேசன் மற்றும் பாரத மாதா நண்ப ர்கள் அன்ன தானக்குழு நிறுவனர் ஆர்.எஸ்.பாண்டி யன் மற்றும் ஊர் மக்கள் செய்து வருகின்றனர்.

    Next Story
    ×