search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காவல் துறை சார்பில்  சிறுவர்கள் குற்ற செயல்களில்  ஈடுபடுவதை தடுக்க  ஓவிய போட்டி
    X

    பரிசு பெற்ற மாணவ-மாணவிகளுடன் ஓமலூர் டி.எஸ்.பி. சங்கீதா, காவல்துறை அதிகாரிகள் உள்ளனர்.

    காவல் துறை சார்பில் சிறுவர்கள் குற்ற செயல்களில் ஈடுபடுவதை தடுக்க ஓவிய போட்டி

    • சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் மொத்தம் 41 மனமகிழ் மன்றங்கள் உள்ளன.
    • சேலம் சரக காவல்துறை துணை தலைவர் ராஜேஸ்வரி உத்தரவின் படி 41 மனமகிழ் மன்றங்களிலும் ஓவிய போட்டி நடத்தப்பட்டது. இதில் 2000 மாணவ - மாணவிகள் கலந்து கொண்டனர்.

    சேலம்:

    சேலம் சரகத்தில் உள்ள சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் மொத்தம் 41 மனமகிழ் மன்றங்கள் உள்ளன. இதில் நலிவுற்ற குழந்தைகளை ஊக்குவிக்கவும், அவர்களை சிறுவயதிலேயே குற்றங்களில் ஈடுபடுவதை தடுக்கவும் மற்றும் குற்றவாளிகளிடம் இருந்து பாதுகாக்கவும் காவல் மனமகிழ் மன்றங்கள் அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது.

    சேலம் சரக காவல்துறை துணை தலைவர் ராஜேஸ்வரி உத்தரவின் படி 41 மனமகிழ் மன்றங்களிலும் ஓவிய போட்டி நடத்தப்பட்டது. இதில் 2000 மாணவ - மாணவிகள் கலந்து கொண்டனர்.

    அவர்களுக்கு அந்தந்த உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர்கள் பாராட்டு சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கினார்கள். இந்த தகவலை சேலம் சரக காவல்துறை அலுவலகம் தெரிவித்துள்ளது.

    Next Story
    ×