search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவை- மேட்டுப்பாளையம் வரை ஓடும் ரெயிலில் ஓவியப்போட்டி
    X

    கோவை- மேட்டுப்பாளையம் வரை ஓடும் ரெயிலில் ஓவியப்போட்டி

    • இந்த போட்டியின் காரணமாக மாணவ- மாணவிகள் உற்சாகம் அடைந்தனர்
    • மாணவர்கள் கைதட்டி பாடல்கள் பாடிய படி உற்சாகமாக வந்தனர்.

    கோவை,

    கோவை சந்திப்பு ரெயில் நிலையத்தில் இருந்து மேட்டுப்பாளையத்துக்கு பயணிகள் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயிலில் நேற்று ஓவியப்போட்டி நடத்தப்ப ட்டது.

    கோவை ரெயில் நிலை யத்தில் இருந்து ரெயில் புறப்பட்டதும் ஓவியப் போட்டி தொடங்கியது. இதில் கோவையைச் சேர்ந்த பள்ளி மாணவ-மாணவிகள் 150-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

    4,5,6,7 பயிலும் மாணவ-மாணவிகள் கொடுக்கப்பட்ட ஓவியத்துக்காக அழகாக வண்ணம் தீட்டினர். 8-ம் வகுப்புக்கு மேல் பயிலும் மாணவர்கள் தூய்மையான இந்தியா மற்றும் தங்கள் விருப்பத்துக்கு ஏற்ப ஓவியம் வரைந்து வண்ணம் தீட்டினர். ஓடும் ரெயில் என்றும் பாராமல் மாணவ-மாணவிகள் உற்சாகத்துடன் ஓவியத்தை வரைந்தனர்.

    மேட்டுப்பாளையம் ரெயில் நிலையம் சென்ற தும் ஓவியப்போட்டி நிறை வடைந்தது. பின்னர் அதே ரெயிலில் புறப்பட்டு மாணவர்கள் கோவை திரும்பி வந்தனர். வழியில் அவர்கள் கைதட்டி பாடல்கள் பாடிய படி உற்சாகமாக வந்தனர்.

    இதுபற்றி மாணவிகள் கூறுகையில் ஓடும் ரெயிலில் ஓவியம் வரைந்தது மிகவும் வித்தியாசமான அனுபவமாக இருந்தது. மேட்டுப்பாளையம் வரை மகிழ்ச்சியாக சென்று வந்தோம்.

    எங்களுக்கு மறக்க முடியாத அனுபவமாக அமைந்திருந்தது என்றனர்.

    போட்டியை நடத்திய புதுவை திருவள்ளுவர் கலைக்கூடம் அமைப்பாளர் சிவகுமார் கூறுகையில் ஓவியம் வரைவதால் மாணவர்களின் சிந்தனை திறன், கற்பனைத்திறன் மேலோங்கும். அறிவாற்றல் கூர்மையாகும். அந்த வகையில் ஓடும் ரெயிலில் நடந்த ஓவியப் போட்டி மாணவர்களின் வாழ்க்கையில் திருப்பு முனையை ஏற்படுத்தும் என்றார்.

    இந்த போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ்களும், வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்படுகிறது.

    Next Story
    ×