என் மலர்
உள்ளூர் செய்திகள்

தூத்துக்குடி மாநகராட்சியில் நாளை நடைபெறும் பகுதி சபா கூட்ட முன்னேற்பாடு குறித்த கூட்டம் கமிஷனர் தினேஷ் குமார் தலைமையில் நடைபெற்ற காட்சி.
தூத்துக்குடி மாநகராட்சியில் நாளை 300 இடங்களில் பகுதி சபா கூட்டம்
- நாளை காலை 10 மணிக்கு அந்தந்த பகுதிகளில் பகுதி சபா கூட்டம் நடைபெற உள்ளது.
- கூட்டத்தில் பகுதி சபா கூட்ட செயலாளர்கள் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாநகர பகுதிகளில் அமைந்துள்ள வார்டுகளுக்கு தலா 5 குழுக்கள் வீதம் 60 வார்டுகளுக்கு 300 பகுதி சபா குழுக்கள் ஏற்படுத்தப் பட்டுள்ளது.
பகுதி சபா கூட்டம்
இதன் முதல் கூட்டம் கடந்தாண்டு நடைபெற்று பொதுமக்களின் கோரிக்கை கள் மனுக்களாக பெறப்பட்டு திட்டங்களாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக நாளை (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு அந்தந்த பகுதிகளில் பகுதி சபா கூட்டம் நடைபெற உள்ளது.கூட்டத்தில் மாநகராட்சி அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், சமூக ஆர்வ லர்கள் கலந்து கொள்ள உள்ள னர்.எனவே அப்பகுதி வாழ் மக்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளு மாறு மாநகராட்சி கமிஷனர் தினேஷ் குமார் கேட்டு கொண்டுள்ளார்.
முன்னேற்பாடு கூட்டம்
இதற்கிடையே பகுதி சபா கூட்டம் தொடர்பான முன்னேற்பாடு குறித்த கலந்தாய்வு கூட்டம் மாநகராட்சி மைய அலுவலக கூட்டரங்கில் கமிஷனர் தினேஷ் குமார் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் பகுதி சபா கூட்ட செயலாளர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். இந்நிலையில் கடந்த ஆண்டு பொதுமக்கள் அளித்த கோரிக்கை மனுக்கள் சிலவற்றின் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருப்பதால் கடந்த ஆண்டு பெறப்பட்ட மனுக்கள் மீது எடுக்கப் பட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்து நாளை நடைபெறும் பகுதி சபா கூட்டத்தில் தெரிவிக்கப்பட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






