search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முன்னாள் படை வீரர்களின் வாரிசுகளுக்கு தொகுப்பு மானியம்- கலெக்டர் தகவல்
    X

    கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்.

    முன்னாள் படை வீரர்களின் வாரிசுகளுக்கு தொகுப்பு மானியம்- கலெக்டர் தகவல்

    • முன்னாள் படை வீரர்களின் பிள்ளைகளுக்கு ரூ.25 ஆயிரம் வழங்கப்படுகிறது.
    • தஞ்சாவூர் மாவட்டம் முன்னாள் படை வீரர் நல உதவி இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு விண்ணப்பம் பெற்று கொள்ளலாம்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெ க்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :-

    முன்னாள் படை வீரர்கள் தங்களது பிள்ளைகளை ராணுவ பணிக்கு அனுப்பினால் தொகுப்பு நிதியிலிருந்து ராணுவ பணி பயிற்சி காலத்தின் போது ஏற்படும் செலவினங்களுக்கு தொகுப்பு மானியமாக கீழ்க்கண்ட வகையில் முன்னாள் படைவீரர் நலத்துறையின் மூலம் நிதி உதவி வழங்கப்படுகிறது.

    முப்படையில் நிரந்தர படை த்துறை அலுவலர் பணிக்காக தேர்ந்தெடுக்கப்பட்டு பயிற்சியில் (NDA/ IMA/Naval/Air force academy) சேர்ந்து பயிற்சி பெற்று வரும் முன்னாள் படை வீரர்களின் பிள்ளைகளுக்கு ரூ.1லட்சம் , முப்படையில் குறுகிய காலப் பணித்துறை அலுவலர் பணிக்காக தேர்ந்தெடுக்கப்பட்டு பயிற்சியில் சேர்ந்து பயிற்சி பெற்று வரும் முன்னாள் படை வீரர்களின் பிள்ளைகளுக்கு ரூ.50 ஆயிரம், ராணுவத்தில் இளநிலை படை அலுவலர்கள் மற்றும் இதரப் பதவிகளின் பணிக்காக தேர்ந்தெடுக்கப்பட்டு பயிற்சியில் சேர்ந்து பயிற்சி பெற்று வரும் முன்னாள் படை வீரர்களின் பிள்ளைகளுக்கு ரூ.25 ஆயிரம் வழங்கப்படுகிறது.

    இந்த திட்டம் 1-4-2005 முதல் நடைமுறையில் உள்ளது.

    தஞ்சாவூர் மாவட்ட த்தை சேர்ந்த முன்னாள் படைவீரர்கள் தங்களது குழந்தைகளை படைப்பணியில் சேர்த்திருப்பின் தஞ்சாவூர் மாவட்டம் முன்னாள் படை வீரர் நல உதவி இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு விண்ணப்பம் பெற்று கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×