search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோத்தகிரியில் முதியோர் இல்லம் அருகே கவிழ்ந்த லாரி
    X

    கோத்தகிரியில் முதியோர் இல்லம் அருகே கவிழ்ந்த லாரி

    • லாரியில் இருந்த சுமார் 4 டன் மரங்கள், உருண்டு வந்தன.
    • முதியோர் இல்லம் முன்பு கனரக லாரிகளை நிறுத்துவதை போலீசார் தடுத்து நிறுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    கோத்தகிரி,

    கோத்தகிரி ராமச்சந்த் பகுதியில் ஜெர்மனியை சேர்ந்த ஒரு தொண்டு நிறுவனம் முதியோர் இல்லம் நடத்தி வருகிறது. இங்கு பிள்ளைகளால் கைவிடப்பட்டோர், உடல்நலம் குன்றியவர்கள், ஆதரவற்றோர்கள் உள்பட சுமார் 40-க்கும் மேற்பட்டோர் உள்ளனர்.

    இந்த நிலையில் மரம் ஏற்றி வந்த ஒரு லாரி இன்று காலை முதியோர் இல்லம் அருகே வந்தது. அப்போது பாரம் தாங்காமல் திடீரென கவிழ்ந்தது. எனவே லாரியில் இருந்த சுமார் 4 டன் மரங்கள், உருண்டு வந்தன.

    எனவே இல்லத்தில் இருந்த முதியோர் மற்றும் ஊழியர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். எனவே அவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பி பிழைத்தனர்.

    இதுகுறித்து ஊழியர்கள் கூறுகையில், முதியோர் இல்லத்தின் முன்பு உள்ள போக்குவரத்து சாலை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு குறுகலாக இருந்தது. எனவே நெடுஞ்சாலைத்துறை சமீபத்தில் விரிவுபடுத்தியது.

    அதன்பிறகு அங்கு கனரக வாகனங்களின் வரத்து அதிகமாக உள்ளது. ஒருசிலர் பாரம் ஏற்றிய லாரிகளை கொண்டு வந்து நிறுத்துகின்றனர். இரவு நேரங்களில் அங்கு ஒருசிலர் உட்கார்ந்து மது அருந்திவிட்டு ரகளையில் ஈடுபடுகின்றனர்.

    ஒரு மணி நேரத்துக்கு முன்பு முதியவர்கள் நடைப்பயிற்சி சென்றனர். அந்த நேரத்தில் லாரி கவிழ்ந்து இருந்தால் அசம்பாவிதம் ஏற்பட்டு இருக்கும். முதியோர் இல்லம் அருகே இந்த மாதிரியான சம்பவங்கள் அடிக்கடி ஏற்படுகிறது. எனவே முதியோர் இல்லம் முன்பு கனரக லாரிகளை நிறுத்துவதை போலீசார் தடுத்து நிறுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    Next Story
    ×