search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆழ்வார்திருநகரி அருகே ரூ.15.55 லட்சம் மதிப்பீட்டில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி - ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. அடிக்கல் நாட்டினார்
    X

    குளத்துகுடியிருப்பில் மேல்நிலை நீர்தேக்க தொட்டிக்கான அடிக்கல் நாட்டு விழா ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. தலைமையில் நடைபெற்றது. அருகில் ஆழ்வார்திருநகரி ஊராட்சி ஒன்றிய சேர்மன் ஜனகர் உள்ளார்.

    ஆழ்வார்திருநகரி அருகே ரூ.15.55 லட்சம் மதிப்பீட்டில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி - ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. அடிக்கல் நாட்டினார்

    • குளத்துக்குடியிருப்பு பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்க திட்டமிடப்பட்டது.
    • அதைத்தொடர்ந்து நாசரேத் முதலாம்மொழி கிராமத்தில் ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் புதிய படித்துறை கட்டும் பணிக்கு ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. அடிக்கல் நாட்டினார்.

    தென்திருப்பேரை:

    ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதி மற்றும் ஆழ்வார்திருநகரி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கடையனோடை பஞ்சாயத்து குளத்துக்குடியிருப்பு பகுதியில் பொதுமக்களுக்கு தடை இன்றி குடிநீர் வழங்குவதற்காக மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

    பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று சட்டமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து ரூ.15.55 லட்சம் மதிப்பீட்டில் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்க திட்டமிடப்பட்டது.

    அதன்படி, புதிய மேல்நிலை நீர்தேக்க தொட்டி அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது. ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி அடிக்கல் நாட்டினார்.

    ஆழ்வார்திருநகரி ஊராட்சி ஒன்றிய சேர்மன் ஜனகர், ஏரல் தாசில்தார் கைலாச குமாரசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சி முடிவில் அப்பகுதி மக்களிடம் ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. குறைகளை கேட்டறிந்தார்.

    அதைத்தொடர்ந்து நாசரேத் முதலாம்மொழி கிராமத்தில் ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் புதிய படித்துறை கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டினார். மேலும் திருக்கோளூர் பஞ்சாயத்து பால்குளம் கிராமத்தில் ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் புதிய பேவர் பிளாக் சாலை போடும் பணியையும் தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ. நேர்முக உதவியாளர் சந்திரபோஸ், காங்கிரஸ் மாவட்ட பொருளாளர் எடிசன், முன்னாள் இளைஞர் அணி தலைவர் ஜெயசீலன், வட்டார தலைவர்கள் ஆழ்வார்திருநகரி கோதண்ட ராமன், ஸ்ரீவைகுண்டம் நல்லகண்ணு, வட்டார செயலாளர் நிலமுடையான், முன்னாள் நகரத்தலைவர் வக்கீல் பாலசுப்பிரமணியன், மாவட்ட பொதுச்செய லாளர்கள் சீனி ராஜேந்திரன், சிவகளை பிச்சையா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×