என் மலர்
உள்ளூர் செய்திகள்

சிவனடியார்கள் திருவாசகம் முற்றோதுவதையும், சிறுவர்கள் வாத்தியங்கள் இசைப்பதையும் படத்தில் காணலாம்.
பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கிய அமைப்பினர்
- நெல்லையப்பர் கோவில் தேரோட்டத்தையொட்டி 4 ரதவீதிகளிலும் சிவனடியார்கள் சங்கொலி எழுப்பி சென்றனர்.
- குழந்தைகளுக்கு பிஸ்கட், சுத்தமான குடிநீரும் வழங்கப்பட்டது.
நெல்லை:
நெல்லையப்பர் கோவில் தேரோட்டத்தையொட்டி இன்று 4 ரதவீதிகளிலும் சிவனடியார்கள் சங்கொலி எழுப்பி சென்றனர். ஏராளமான பெண் பக்தர்கள் கலந்து கொண்டு திருவாசகம் முற்றோதினர்.
பாராயணங்களும் பாடினர். சிறுவர்கள் கூட்டமாக கூடி இசை வாத்தியங்கள் வாசித்தனர்.
விழாவை முன்னிட்டு பல்வேறு தொண்டு நிறுவனங்கள், அமைப்புகள் சார்பில் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
குழந்தைகளுக்கு பிஸ்கட், சுத்தமான குடிநீரும் வழங்கப்பட்டது. இதுதவிர ரதவீதிகளுக்கு நுழையும் பகுதிகளில் ஏராளமான இடங்களில் சர்பத், பானக்காரம், குடிநீர் உள்ளிட்ட பல்வேறு பானங்கள் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.
Next Story






