search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கும்பகோணம் கோட்டம் சார்பில் 175 சிறப்பு பஸ்கள் இயக்கம்
    X

    கும்பகோணம் கோட்டம் சார்பில் 175 சிறப்பு பஸ்கள் இயக்கம்

    • பிற தடங்களில் 75 சிறப்பு பஸ்களும் இயக்க விரிவான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
    • பயணிகள் தங்கள் சொந்த ஊா்களுக்கு செல்ல வசதியாக இணைய முகவரியில் முன்பதிவு செய்யலாம்.

    தஞ்சாவூர்:

    தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் கும்பகோணம் கோட்டம் சாா்பில் இன்று முதல் 4 நாள்களுக்கு 175 சிறப்புப் பஸ்கள் இயக்கப்படவுள்ளன.

    இதுகுறித்து போக்குவ ரத்துக் கழகத்தின் கும்பகோ ணம் கோட்ட மேலாண் இயக்குநா் ஆா். மோகன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    நாளை ( சனிக்கிழமை), நாளை மறுநாள் ( ஞாயிற்றுக்கிழமை ) வார விடுமுறையையொட்டி, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் கும்பகோணம் கோட்டம் சாா்பில் பொதுமக்களின் வசதிக்காக திருச்சி, கும்பகோணம், தஞ்சாவூா், பட்டுக்கோட்டை, நாகப்பட்டினம், திருவாரூா், மயிலாடுதுறை, வேதாரண்யம், திருத்துறைப்பூண்டி, புதுக்கோட்டை, காரைக்குடி, இராமநாதபுரம் ஆகிய ஊா்களிலிருந்து சென்னை க்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

    இதேபோல் சென்னை யிலிருந்து மேற்கண்ட ஊா்களுக்கு 100 பஸ்களும், திருச்சியிலிருந்து கோவை, திருப்பூா், மதுரை ஆகிய ஊா்களுக்கும், அந்த ஊா்களில் இருந்து திருச்சிக்கும், திருச்சியிலிருந்து காரைக்குடி, புதுக்கோட்டை, தஞ்சாவூா், நாகப்பட்டினம், வேளாங்கண்ணி ஆகிய ஊா்களுக்கு 75 பஸ்கள் என மொத்தம் 175 சிறப்புப் பஸ்கள் இன்றும், நாளையும் இயக்கப்பட உள்ளன.

    விடுமுறைக்கு வந்த பயணிகள் அவரவா் ஊா்களுக்கு திரும்பிச் செல்ல வரும் 29, 30 ஆம் தேதிகளில் (ஞாயிறு, திங்கள்) சென்னை தடத்தில் 100 சிறப்புப் பஸ்களும், பிற தடங்களில் 75 சிறப்புப் பஸ்களும் இயக்க விரிவான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    விடுமுறை முடிந்து பயணிகள் திரும்ப ஞாயிற்றுக்கிழமையும், திங்கள்கிழமையும் திருச்சியிலிருந்து சென்னைக்கு நள்ளிரவு 1 மணி வரையிலும், பெரம்பலூா், ஜெயங்கொ ண்டம், அரியலூரிலிருந்து சென்னைக்கு நள்ளிரவு 12 மணி வரையிலும், புதுக்கோட்டை, நாகப்பட்டினம், திருத்துறை ப்பூண்டி, வேதாரண்யம், திருவாரூா், மயிலாடுதுறை, வேளாங்கண்ணி, கும்பகோணம், தஞ்சாவூா், பட்டுக்கோட்டை ஆகிய ஊா்களில் இருந்து சென்னைக்கு நள்ளிரவு 12 மணி வரையிலும், காரைக்குடி, சிவகங்கை ஆகிய ஊா்களில் இருந்து சென்னைக்கு இரவு 10 மணி வரையிலும், இராமநாதபுரத்திலிருந்து சென்னைக்கு இரவு 9.30 மணி வரையிலும் பயணிகள் பயன்பாட்டுக்கு ஏற்ப சிறப்புப் பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    சனிக்கிழமை, ஞாயிற்றுக்கி ழமை விடுமுறை காரணமாக பயணிகள் தங்கள் சொந்த ஊா்களுக்கு செல்ல வசதியாக இணைய முகவரியில் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறது. அதற்கேற்ப கூடுதலாக பஸ்கள் இயக்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×