search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பிள்ளையார்பட்டியில், மேற்கூரை அமைப்புடன் கூடிய நெல் சேமிப்பு தளங்கள் திறப்பு
    X

    முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் பிள்ளையார்பட்டியில் மேற்கூரை அமைப்புடன் கூடிய நெல் சேமிப்பு தளங்களை திறந்து வைத்தார்.

    பிள்ளையார்பட்டியில், மேற்கூரை அமைப்புடன் கூடிய நெல் சேமிப்பு தளங்கள் திறப்பு

    • மழை காலத்தில் மூட்டையில் இருக்கும் நெல் முளைத்து பயனின்றி போகிறது.
    • 58,500 மெடன் கொள்ளளவு கொண்ட மேற்கூரை அமைக்கும் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது.

    தஞ்சாவூர் மாவட்டத்தில் பயிரிடும் நெல் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக குடோன்களில் கொள்முதல் செய்து வைக்கப்படுகிறது.

    பெரும்பாலான இடங்களில் கூரையுடன் கூடிய கொள்முதல் மையம் இல்லாததால் விவசா யிகளிடம் கொள்முதல் செய்த நெல்லை பாதுகாக்க இடமின்றி திறந்த வெளியில் அடுக்கி வைக்கின்றனர்.

    இதனால் மழை, வெயிலில் நெல் மூட்டைகள் பாதிக்கப்படுகின்றன. மழைக் காலத்தில் மூட்டையில் இருக்கும் நெல் முளைத்து பயனின்றி போகிறது.

    இதை தவிர்க்க திறந்த வெளி சேமிப்பு மையங்களில் கட்டாயம் கான்கீரிட் தளத்துடன் கூடிய மேற்கூரை அமைப்பது அவசியம் என விவசாய சங்கங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தன.

    அதன் பொருட்டு அரசு, நெல்லை பாதுகாக்க கான்கீரிட் தளத்துடன் கூடிய மேற்கூரை கட்ட ரூ.35.205 கோடியில் தஞ்சாவூர் மாவட்டத்தில் பிள்ளையார்பட்டியில் 50,000 மெ.டன், சென்னம்பட்டியில் 2,500 மெடன் மற்றும் பட்டுக்கோட்டை தாலுகா, திட்டக்குடியில் 6,000 மெடன் என மொத்தமாக 58,500 மெடன் கொள்ளளவு கொண்ட மேற்கூரை அமைக்கும் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில் முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காணொலி காட்சி மூலம் முதற்கட்டமாக தஞ்சை பிள்ளையார்பட்டியில் 31000 மெ.டன் (31 x 1000 மெ.டன்) கொள்ளளவில் 31 எண்ணங்கள் கான்கீரிட் தளத்துடன் கூடிய மேற்கூரையை திறந்து வைத்தார்.

    அதனை தொடர்ந்து பிள்ளையார்பட்டியில் நடந்த நிகழ்ச்சியில் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மண்டல முதுநிலை மேலாளர் உமா மகேஸ்வரி, எம்.எல்.ஏ.க்கள் துரை. சந்திரசேகரன், டி.கே.ஜி. நீலமேகம், முன்னாள் எம்.எல்.ஏ. ராமச்சந்திரன், மாநகராட்சி மேயர் சண் ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உஷா புண்ணியமூர்த்தி, தாசில்தார் சக்திவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×