என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    செங்கோட்டை நகராட்சி 14-வது வார்டு பகுதியில்  பொதுபாதை மக்கள் பயன்பாட்டிற்கு திறப்பு
    X

    சிமெண்ட் ரோட்டை பொன்னுலிங்கம் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்த காட்சி.

    செங்கோட்டை நகராட்சி 14-வது வார்டு பகுதியில் பொதுபாதை மக்கள் பயன்பாட்டிற்கு திறப்பு

    • செங்கோட்டை மேலூர் 14-வது வார்டு பகுதியில் அமைந்துள்ள சிமெண்ட் ரோட்டை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனா்.
    • பொதுமக்கள் பயன்பாட்டிற்காக சிமெண்ட் ரோட்டை பொன்னுலிங்கம் திறந்து வைத்தார்.

    செங்கோட்டை:

    செங்கோட்டை மேலூர் 14-வது வார்டு பகுதியில் வெள்ளையப்பன் தெரு, பட்டங்கட்டியார் தெரு, மற்றும் சுப்பையா தெரு, நடுவில் அமைந்துள்ள சிமெண்ட் ரோட்டை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்து தரும்படி தேர்தல் சமயத்தில் 14-வது வார்டு பகுதியில் போட்டியிட்ட பொன்னுலிங்கத்திடம் அப்பகுதி பொது மக்கள் கோரிக்கை வைத்தனா்.

    இதனை ஏற்று 14-வது வார்டு நகர்மன்ற உறுப்பினா் பொன்னுலிங்கம் பொது மக்களிடம் உறுதிமொழி பெற்று, செங்கோட்டை நகராட்சியிடம் முறையாக அனுமதி பெற்று நகர்மன்ற தலைவா் ராமலெட்சுமி தலைமையிலும், நகராட்சி ஆணையாளா் (பொறுப்பு) ஜெயப்பிரியா, நகராட்சி சுகாதார அலுவலா் ராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலையில் அந்த சிமெண்ட் ரோட்டை பொன்னுலிங்கம் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார். இதனையடுத்து 14-வது வார்டு பொதுமக்கள் நகராட்சி நிர்வாகத்திற்கும், நகர்மன்ற உறுப்பினா் பொன்னுலிங்கத்திற்கும் நன்றி தெரிவித்தனா். நிகழ்ச்சியில் நகராட்சி பணியாளா்கள், பொதுமக்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனா்.

    Next Story
    ×