என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  ஊட்டி கிரெசென்ட் பள்ளி மாணவர்கள் சாதனை
  X

  ஊட்டி கிரெசென்ட் பள்ளி மாணவர்கள் சாதனை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • 2022-ம் ஆண்டிற்கான தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி பிராந்திய அளவிலான ஹாக்கி போட்டியை நடத்தியது,
  • சிறப்பான வெற்றியை பெற்று தந்த அனைத்து அனைத்து வீரர்களையும் பாராட்டினர்.

  ஊட்டி

  புதுடெல்லியில் உள்ள இந்திய பள்ளி சான்றிதழ் தேர்வுக்கான கவுன்சில் 2022-ம் ஆண்டிற்கான தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி பிராந்திய அளவிலான ஹாக்கி போட்டியை நடத்தியது,

  இதன் இறுதி போட்டியில் நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள கிரெசென்ட் பள்ளி ஹாக்கி வீரர்கள் கலந்துகொண்டு 3 பிரிவுகளில் சாதனை படைத்துள்ளனர். 14 வயதுக்குட்பட்ட பிரிவில் கிரெசென்ட் பள்ளி மாணவர்கள் 6-1 என்ற கோல் கணக்கில் பிருந்தாவன் பப்ளிக் பள்ளியையும், 19 வயதுக்குட்பட்ட பிரிவில் கிரசன்ட் பள்ளி ஹோலி இன்னசென்ட்ஸ் உயர்நிலைப் பள்ளியை 2-1 கோல் கணக்கில் வீழ்த்தியது.

  17 வயதுக்குட்பட்ட பிரிவில் பிந்தவன் பப்ளிக் பள்ளியிடம் கிரசன்ட் பள்ளி 1 – 0 என்ற கோல் கணக்கில் வெற்றி வாய்ப்பை இழந்து இரண்டாம் இடத்தை பிடித்தது.

  தேசிய அளவிலான ஹாக்கி போட்டியில் கலந்துகொண்டு பள்ளிக்கு சிறப்பான வெற்றியை பெற்று தந்த அனைத்து அனைத்து வீரர்களையும் பள்ளியின் சார்பாக பள்ளி தாளாளர் உமர்பாருக் மற்றும் பெற்றோர் ஆசிரியர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

  Next Story
  ×