search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இயற்கை வேளாண்மை குறித்து பஞ்சாயத்து தலைவர்களுக்கு இணையவழி விழிப்புணர்வு பயிற்சி-கலெக்டர் தொடங்கி வைத்தார்
    X

    காணொலிக்காட்சி வாயிலாக கிராம பஞ்சாயத்து தலைவர்களுக்கு விழிப்புணர்வு பயிற்சி நடைபெற்ற காட்சி.

    இயற்கை வேளாண்மை குறித்து பஞ்சாயத்து தலைவர்களுக்கு இணையவழி விழிப்புணர்வு பயிற்சி-கலெக்டர் தொடங்கி வைத்தார்

    • வேளாண்மை இணை இயக்குநர் கஜேந்திரபாண்டியன் பஞ்சாயத்து தலைவர்களை வரவேற்று இயற்கை வேளாண்மையின் முக்கியத்துவம் பற்றி எடுத்துக்கூறினார்.
    • காணொலிக்காட்சி வாயிலாக 100-க்கும் அதிகமானோர் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

    நெல்லை:

    'இயற்கை வேளாண்மை' குறித்த இணைய வழி பயிற்சி முகாம் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம பஞ்சாயத்து தலைவர்களுக்கும் காணொலிக்காட்சி வாயிலாக வேளாண்மை - உழவர் நலத்துறை சார்பில் உழவர் பயிற்சி நிலையம் மூலம் நடைபெற்றது.

    இயற்கை வேளாண்மை குறித்த பயிற்சியை மாவட்ட கலெக்டர் விஷ்ணு தொடங்கி வைத்தார். நெல்லை மாவட்டம் இயற்கை வேளாண்மையில் முன்னோடி மாவட்டமாக இருப்பதையும், இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் முன்னெடுத்துள்ள திட்டங்களையும் குறிப்பிட்டு சிறப்புரை ஆற்றினார். வேளாண்மை இணை இயக்குநர் கஜேந்திரபாண்டியன் பஞ்சாயத்து தலைவர்களை வரவேற்று இயற்கை வேளாண்மையின் முக்கியத்துவம் பற்றி எடுத்துக் கூறினார்.

    உழவர் பயிற்சி நிலையத்தின் வேளாண்மை துணை இயக்குநர் டேவிட்டென்னிசன் இயற்கை வேளாண்மையின் நெறிமுறைகள், மண்ணின் உயிரோட்டத்தன்மை மற்றும் இயற்கை விவசாய கோட்பாடுகள் குறித்து விளக்கினார். ஊர்மேலழகியான் வேளாண் அறிவியல் மையத்தின் தலைவர் சுகுமார் இயற்கை வேளாண்மையில் உழவியல் முறைகள், பயிர் சுழற்சி மற்றும் பயிர் சத்துக்கள் மேலாண்மை குறித்தும் 'பஞ்சகாவ்யா' "ஜிவாமிர்த கரைசல்கள்" தயாரிப்பது பற்றியும் விரிவாக எடுத்துக் கூறினார்.

    அதையடுத்து கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம், நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மைய பேராசிரியர் சுகந்தி இயற்கை வேளாண்மையில் ஒருங்கிணைந்த பூச்சி நோய் நிர்வாக முறைகள் குறித்து விளக்கி பேசினார். பின்னர் இயற்கை வேளாண்மையை கடந்த 10 வருடங்களாக மேற்கொண்டு வரும் 'மகேந்திரகிரி பாரம்பரிய விவசாயிகள் சங்கத் தலைவர்" மகேஸ்வரன் இயற்கை வேளாண்ைமயை தான் செய்து வருவதால் பெற்ற நன்மைகளை பகிர்ந்து கொண்டார்.

    நெல்லை மாவட்ட அனைத்து ஊராட்சி மன்ற தலைவர்களும் அந்தந்த வட்டாரத்தில் உள்ள வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தின் மூலம் காணொலிக்காட்சி வாயிலாக இணைந்து நூற்றுக்கு அதிகமானோர் பயனடைந்தனர். வேளாண்மை அலுவலர் ஞானதீபா பயிற்சிக்கான ஏற்பாடுகளை செய்தார்.

    Next Story
    ×