என் மலர்
உள்ளூர் செய்திகள்

பாளையில் மோட்டார் சைக்கிள் திருடியவர் கைது-போலீஸ் வாகன சோதனையில் சிக்கினார்
- பாளை சப்-இன்ஸ்பெக்டர் சண்முக மூர்த்தி மற்றும் போலீசார் குரு பரம்பரை தெருவில் ரோந்து சென்றனர்.
- அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் சந்தேகத்திற்கிடமாக வந்த ஒருவரை நிறுத்தி சோதனை செய்தனர்.
நெல்லை:
பாளை சப்-இன்ஸ்பெக்டர் சண்முக மூர்த்தி மற்றும் போலீசார் குரு பரம்பரை தெருவில் ரோந்து சென்றனர்.
அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் சந்தேகத்திற்கிடமாக வந்த ஒருவரை நிறுத்தி சோதனை செய்தனர்.
அப்போது அவர் ஓட்டி வந்தது திருட்டு மோட்டார் சைக்கிள் என்பது தெரிய வந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.
விசாரணையில் அவர் ராமையன்பட்டியை சேர்ந்த சுரேஷ் (வயது 40) என்பது தெரிய வந்தது. இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு பாளை கீழஓமநல்லூர் பகுதியை சேர்ந்த ஒருவரது மோட்டார் சைக்கிளை திருடி உள்ளார்.
அதனை ஓட்டி வந்த போது தான் போலீசாரிடம் சிக்கி உள்ளார். அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






